Tamil News  /  Astrology  /  Here We Will See About The Zodiac Signs That Will Be Troubled By The Setting Of Saturn

Shani: சனி அஸ்தமனத்தால் சிக்கி சிதைய போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 10, 2024 01:50 PM IST

சனி அஸ்தமனத்தால் சிரமப்படப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

சனி அஸ்தமனம்
சனி அஸ்தமனம்

ட்ரெண்டிங் செய்திகள்

சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார் இவருடைய இடமாற்றம் சில ராசிகளுக்கு வேதனையையும், சில ராசிகளுக்கு யோகத்தையும் கொடுக்கும். 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனிபகவான் தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் 2025 வரை இதே ராசியில் பயணம் செய்கின்றார்.

இந்த ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி அன்று அதாவது நாளை கும்ப ராசியில் சனி பகவான் அஸ்தமனம் ஆகின்றார். சில ராசிகளுக்கு இந்த இடமாற்றம் சாதகமாக அமைந்தாலும் சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலைகள் உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

தனுசு ராசி

 

சனிபகவான் உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் அஸ்தமனமாக போகின்றார். உங்களுக்கு பல்வேறு விதமான சிரமங்கள் அதிகரிக்க போகின்றது. வசதிகள் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம். தன்னம்பிக்கையில் குறைவு ஏற்படக்கூடும். ஒவ்வொரு வேலையிலும் சிறு சிறு தடைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. பயணம் மேற்கொள்ளும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிலருக்கு வேலை மாற்றம் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது.

துலாம் ராசி

 

உங்கள் ராசியில் சனிபகவான் ஐந்தாவது வீட்டில் அஸ்தமனம் ஆகின்றார். இதனால் உங்களுக்கு சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குழந்தைகளால் பெற்றோர்களுக்கு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தொழில் ரீதியாக ஏமாற்றம் அடையக்கூடிய சூழ்நிலை உண்டாகும். மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் பல்வேறு விதமான மாற்றங்களை காணுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. வியாபாரிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நஷ்டம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.

கன்னி ராசி

 

உங்கள் ராசிகள் ஆறாவது வீட்டில் சனி அஸ்தமனம் ஆகின்றார். இதனால் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முடிவுகள் எடுக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மனம் தளர்ந்து முயற்சிகளை தளர விடாமல் தன்னம்பிக்கையோடு போராட வேண்டும் நிதி ரீதியாக சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களால் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது கவனமாக இருக்க வேண்டும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.