தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Luck: செவ்வாயால் பணம் கொட்டப் போகின்றது.. மூச்சுத் திணறல் மகிழ்ச்சியில் வாழப் போகும் ராசிகள்.. உங்க ராசி என்ன?

luck: செவ்வாயால் பணம் கொட்டப் போகின்றது.. மூச்சுத் திணறல் மகிழ்ச்சியில் வாழப் போகும் ராசிகள்.. உங்க ராசி என்ன?

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 01, 2024 02:36 PM IST

Lord Mars: செவ்வாய் பகவானின் சொந்தமான ராசியாக மேஷ ராசி விளங்கி வருகின்றது. சொந்த ராசி பயணத்தின் காரணமாக ருச்சக யோகம் உருவாகி உள்ளது. இதன் காரணமாக சில ராசிகள் கஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

செவ்வாயால் பணம் கொட்டப் போகின்றது.. மூச்சுத் திணறல் மகிழ்ச்சியில் வாழப் போகும் ராசிகள்.. உங்க ராசி என்ன?
செவ்வாயால் பணம் கொட்டப் போகின்றது.. மூச்சுத் திணறல் மகிழ்ச்சியில் வாழப் போகும் ராசிகள்.. உங்க ராசி என்ன?

Lord Mars: நவகிரகங்களின் தளபதியாக விளங்க கூடியவர் செவ்வாய் பகவான். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை, தைரியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

செவ்வாய் பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு மன தைரியம் அதிகரிக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் செவ்வாய் பகவான் ஜூன் ஒன்றாம் தேதியன்று மேஷ ராசியில் நுழைந்தார். இது அனைவரது வாழ்க்கையிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். செவ்வாய் பகவானின் இடமாற்றம் சில ராசிகளுக்கு சாதகமாக இருந்தாலும் ஒரு சில ராசிகளுக்கு சூழ்நிலையை உருவாக்கியது.

செவ்வாய் பகவானின் சொந்தமான ராசியாக மேஷ ராசி விளங்கி வருகின்றது. சொந்த ராசி பயணத்தின் காரணமாக ருச்சக யோகம் உருவாகி உள்ளது. இதன் காரணமாக சில ராசிகள் கஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் பன்னிரண்டாவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உயர் அலுவலர்களோடு வாக்குவாதம் ஏற்படக்கூடும் சக ஊழியர்களோடு பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

வியாபாரம் மந்தமாக இருக்கும் தொழிலில் பெரிய முன்னேற்றம் இருக்காது. கூட்டுத் தொழில் முயற்சிகளை தற்போது தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் அவ்வப்போது சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்படக்கூடும். கணவன் மனைவிக்கிடையே சண்டைகள் ஏற்படக்கூடும். மற்றவர்களிடத்தில் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்

கன்னி ராசி

செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் நிகழ்ந்துள்ளது. இதனால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. கண் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உறவினர்களால் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

வியாபாரத்தில் பெரிய முன்னேற்றம் இருக்காது. வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களுடன் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உயர் அலுவலர்களோடு வாக்குவாதம் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேற்றுவதற்கு சற்று தாமதமாகும்.

மகர ராசி

செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு உடல் நல குறைபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் தனிப்பட்ட கவனம் செலுத்தி முன்னேற்றத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். மற்றவர்களிடம் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். பெற்றோரின் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது. தொழிலில் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலை இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கு சற்று தாமதமாகும். உயர் அலுவலர்களோடு சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமற்ற சூழ்நிலையை கொடுப்பார்கள். காதல் வாழ்க்கை பல்வேறு விதமான சிக்கல்களை காணும். குடும்ப வாழ்க்கையில் சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது. வாழ்க்கை துணையோடு வாக்குவாதம் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும். மொத்தத்தில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9