Shani Sukra Palangal: சனி மீது பாய்ந்த சுக்கிரன்.. பார்வையால் பணம் கொட்டும் ராசிகள்.. அதிர்ஷ்டம்.. யோகம் யாருக்கு?-here we will see about the zodiac signs that will be soaked in luck due to saturn venus aspect - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Shani Sukra Palangal: சனி மீது பாய்ந்த சுக்கிரன்.. பார்வையால் பணம் கொட்டும் ராசிகள்.. அதிர்ஷ்டம்.. யோகம் யாருக்கு?

Shani Sukra Palangal: சனி மீது பாய்ந்த சுக்கிரன்.. பார்வையால் பணம் கொட்டும் ராசிகள்.. அதிர்ஷ்டம்.. யோகம் யாருக்கு?

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 04, 2024 11:53 AM IST

Shani Sukra Palangal: சனி மற்றும் சுக்கிரன் இவர்கள் ஆகஸ்ட் மாதத்தில் ஒருவரை ஒருவர் ஏழாம் பார்வையில் பார்க்கின்ற காரணத்தினால் ஒரு சில ராசிகளுக்கு இது அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து உங்களுக்கு காணலாம்.

சனி மீது பாய்ந்த சுக்கிரன்.. பார்வையால் பணம் கொட்டும் ராசிகள்.. அதிர்ஷ்டம்.. யோகம் யாருக்கு?
சனி மீது பாய்ந்த சுக்கிரன்.. பார்வையால் பணம் கொட்டும் ராசிகள்.. அதிர்ஷ்டம்.. யோகம் யாருக்கு?

சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். அந்த வகையில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்பராசிகள் பயணம் செய்து வருகிறார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்.

நவக்கிரகங்களில் ஆடம்பர நாயகனாக விளங்கக்கூடியவர் சுக்கிர பகவான். இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

சனி மற்றும் சுக்கிரன் இவர்கள் ஆகஸ்ட் மாதத்தில் ஒருவரை ஒருவர் ஏழாம் பார்வையில் பார்க்கின்ற காரணத்தினால் ஒரு சில ராசிகளுக்கு இது அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து உங்களுக்கு காணலாம்.

ரிஷப ராசி

சனி மற்றும் சுக்கிரன் பார்வை உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. நிதி நிலைமைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். 

மிகப்பெரிய நிதி ஆதாயங்கள் உங்களுக்கு கிடைக்கும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. பணவரவில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.

கடக ராசி

சனி மற்றும் சுக்கிரன் பார்வை உங்களுக்கு அதிர்ச்சத்தை கொடுக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். அலுவலகத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். 

திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வழக்கத்தை விட உங்களுக்கு பணவரவு அதிகமாக இருக்கும்.

துலாம் ராசி

சனி மற்றும் சுக்கிரன் பார்வை உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. நிதி நிலைமைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும். நல்ல பலன்களை இருவரும் உங்களுக்கு வாரி கொடுக்கப் போகின்றார்கள். யோக காலத்தில் உங்களுக்கு வருமானத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். 

நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் உள்ள லாபம் கிடைக்கும். மனதில் தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தொடர்புடையை செய்திகள்