தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Guru: குரு புகுந்து விளையாடுகிறார்.. ரோகிணியில் கொட்டும் பணமழை அதிர்ஷ்டத்தில் நனையும் ராசிகள்

Lord Guru: குரு புகுந்து விளையாடுகிறார்.. ரோகிணியில் கொட்டும் பணமழை அதிர்ஷ்டத்தில் நனையும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 30, 2024 12:03 PM IST

Lord Guru: குரு பகவான் ரோகிணி நட்சத்திர பயணமானது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

குரு புகுந்து விளையாடுகிறார்.. ரோகிணியில் கொட்டும் பணமழை அதிர்ஷ்டத்தில் நனையும் ராசிகள்
குரு புகுந்து விளையாடுகிறார்.. ரோகிணியில் கொட்டும் பணமழை அதிர்ஷ்டத்தில் நனையும் ராசிகள்

Lord Guru: நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். குரு பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். குருபகவான் கடந்த மே ஒன்றாம் தேதி என்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் மாறினார். இது அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதற்குப் பிறகு இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். குரு பகவான் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் குரு பகவான் கடந்த ஜூன் 13ஆம் தேதி அன்று ரோகிணி நட்சத்திரத்தில் நுழைந்தார். இது சந்திர பகவானின் நட்சத்திரமாகும். வருகின்ற ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார். குரு பகவான் ரோகிணி நட்சத்திர பயணமானது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

சிம்ம ராசி

குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான பலன்களை கொடுக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். பழைய முதலீடுகளால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். 

வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பேச்சு திறமையால் காரியங்கள் வெற்றி அடையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களோடு சற்று கவனமாக இருப்பது நல்லது.

கன்னி ராசி

குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். குரு பகவானின் ஐந்தாம் பார்வையாக இருக்கக்கூடிய யோக பார்வை உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

நிதி நிலைமைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிதாக திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கக்கூடும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

துலாம் ராசி

குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப்போகின்றது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். இதுவரை உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. 

புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். கூட்டுத்தொழில் முயற்சிகள் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9