தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Surya: ஆடம்பரத்தில் கொட்டும் சூரியன்.. பண மழையில் விளையாடும் ராசிகள்.. யோகம் உங்களுக்குத்தான்

Lord Surya: ஆடம்பரத்தில் கொட்டும் சூரியன்.. பண மழையில் விளையாடும் ராசிகள்.. யோகம் உங்களுக்குத்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 15, 2024 05:37 PM IST

Lord Surya: சூரியன் மற்றும் புதன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்கள் என்பதால் அனைத்து ராசிகளுக்கும் சிறப்பான தாக்கங்கள் இருக்கும். இருப்பினும் சூரிய பகவானின் மிதுன ராசி பயணத்தால் ஒரு சில ராசிகள் மிகவும் சிறப்பான பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ஆடம்பரத்தில் கொட்டும் சூரியன்.. பண மழையில் விளையாடும் ராசிகள்.. யோகம் உங்களுக்குத்தான்
ஆடம்பரத்தில் கொட்டும் சூரியன்.. பண மழையில் விளையாடும் ராசிகள்.. யோகம் உங்களுக்குத்தான்

சூரியன் மாதத்திற்கு ஒருமுறை ஒரு தனது இடத்தை மாற்றும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. சூரிய பகவான் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். தற்போது ஜூன் மாதம் 15ஆம் தேதி அன்று சூரிய பகவான் மிதுன ராசியில் புகுந்தார். இது புதன் பகவானின் சொந்தமான ராசியாகும்.

சூரியன் மற்றும் புதன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்கள் என்பதால் அனைத்து ராசிகளுக்கும் சிறப்பான தாக்கங்கள் இருக்கும். இருப்பினும் சூரிய பகவானின் மிதுன ராசி பயணத்தால் ஒரு சில ராசிகள் மிகவும் சிறப்பான பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

கன்னி ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சூரிய பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நீண்ட நாட்களாக முடியாமல் கிடந்த வேலைகள் அனைத்தும் முடியும். எதிர்பாராத நேரத்தில் நிதிபரப்பு இருக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். 

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். அதிக சம்பளம் கிடைக்கக்கூடிய வேலைவாய்ப்புகள் உங்களை தேடி வரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தினரால் உங்களுக்கு மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். உறவினர்களால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.

மிதுன ராசி

உங்கள் ராசியில் முதல் வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் கொஞ்சம் கொஞ்சமாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு உயர் அலுவலர்கள் சிறப்பான பலன்களை கொடுப்பார்கள். 

வேலை செய்து மடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும். நல்ல நிதி ஆதாயம் உங்களுக்கு கிடைக்கும். நிதி நிலைமை வலிமையான சூழ்நிலையாக மாறும் திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் சூரியன் மூன்றாவது பெட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் தேடி வர போகின்றது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கக்கூடும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமையில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். உறவினர்களால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமண பாக்கியம் உங்களுக்கு கிடைக்கக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான பலன்கள் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9