Lord Rahu: 2025 ஆம் ஆண்டு வரை கொட்டிக் கொடுக்கும் ராகு.. கதவை திறந்தால் பணமழை கொட்டும் ராசிகள்.. அதிர்ஷ்டம் உறுதி
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Rahu: 2025 ஆம் ஆண்டு வரை கொட்டிக் கொடுக்கும் ராகு.. கதவை திறந்தால் பணமழை கொட்டும் ராசிகள்.. அதிர்ஷ்டம் உறுதி

Lord Rahu: 2025 ஆம் ஆண்டு வரை கொட்டிக் கொடுக்கும் ராகு.. கதவை திறந்தால் பணமழை கொட்டும் ராசிகள்.. அதிர்ஷ்டம் உறுதி

Suriyakumar Jayabalan HT Tamil
Published Jul 08, 2024 06:00 PM IST

Lord Rahu: ராகு பகவான் ஜூலை எட்டாம் தேதியில் இருந்து சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்து பயணம் செய்யப் போகின்றார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் அடுத்த ஆண்டு மே மாதம் வரை யோகத்தை அனுபவிக்க போகும் ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

2025 ஆம் ஆண்டு வரை கொட்டிக் கொடுக்கும் ராகு.. கதவை திறந்தால் பணமழை கொட்டும் ராசிகள்.. அதிர்ஷ்டம் உறுதி
2025 ஆம் ஆண்டு வரை கொட்டிக் கொடுக்கும் ராகு.. கதவை திறந்தால் பணமழை கொட்டும் ராசிகள்.. அதிர்ஷ்டம் உறுதி

இது போன்ற போட்டோக்கள்

ராகு பகவான் எப்போதும் தீமைகளை செய்வது கிடையாது. இருக்கும் இடத்தை பொறுத்து அவ்வப்போது பல நன்மைகளையும் செய்யக்கூடியவர். அந்த வகையில் ராகு பகவான் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் மீன ராசிகள் நுழைந்தார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்.

சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராக பகவான் விளங்கி வருகின்றார். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ராகு பகவான் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். இதனால் ராகு பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.

ராகு பகவான் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ராகு பகவான் ஜூலை எட்டாம் தேதியில் இருந்து சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்து பயணம் செய்யப் போகின்றார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் அடுத்த ஆண்டு மே மாதம் வரை யோகத்தை அனுபவிக்க போகும் ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

ரிஷப ராசி

ராகு பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப்போகின்றது. நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். உங்களுக்கு கவலைகள் கொடுத்த வேலைகள் அனைத்தும் நிவர்த்தி அடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். பங்குச்சந்தை முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். வருமானத்திற்கான ஆதாரங்கள் உங்களுக்கு அதிகரிக்கக்கூடும். குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

துலாம் ராசி

உங்கள் ராசிகள் திடீர் பணவரவை ராகுபகவான் ஏற்படுத்திக் கொடுக்கப் போகின்றார். ராகு பகவான் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. வருமானத்திற்கு புதிய ஆதாரங்கள் உங்களுக்கு உருவாகும். அதிர்ஷ்ட தேவதை உங்கள் வாசல் தேடி வந்துவிட்டார். 

வியாபாரத்தில் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களை தேடி வருகின்றது.

விருச்சிக ராசி

ராகு பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு அதிர்ஷ்டம் தரப்போகின்றது. திடீர் பணவரவு உங்களுக்கு மிகப்பெரிய லாபத்தை பெற்று தரும். நட்சத்திர இடமாற்றத்தால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். கால தாமதம் என்று உங்களுக்கு பல்வேறு விதமான வேலைகள் முடிவடையும். நிலுவையில் உள்ள அனைத்து காரியங்களும் வெற்றிகரமாக முடிவடையும். 

நிதி நிலைமையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். சிறந்த பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதிக கவனம் செலுத்தினால் உங்களுக்கு இரட்டிப்பான லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். எடுத்துக் கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9