தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Surya: ராஜயோகம் தேடி வருது.. சூரியன் கொட்டும் ராசிகள்.. இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாது

Lord Surya: ராஜயோகம் தேடி வருது.. சூரியன் கொட்டும் ராசிகள்.. இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாது

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 02, 2024 05:06 PM IST

Lord Surya: சூரியன் மற்றும் சுக்கிரன் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றன. சுமார் 30 நாட்களுக்கு இதே ராசியில் பயணம் செய்வார். சூரிய பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ராஜயோகம் தேடி வருது.. சூரியன் கொட்டும் ராசிகள்.. இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாது
ராஜயோகம் தேடி வருது.. சூரியன் கொட்டும் ராசிகள்.. இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாது

மேஷ ராசியில் பயணம் செய்து வந்த சூரிய பகவான் கடந்த மே 14ஆம் தேதி அன்று ரிஷப ராசியில் நுழைந்தார். இது சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும். சூரியன் மற்றும் சுக்கிரன் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றன. சுமார் 30 நாட்களுக்கு இதே ராசியில் பயணம் செய்வார். சூரிய பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். அதனால் உங்களுக்கு நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பொழுது போக்குகளில் உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

ரிஷப ராசி

உங்கள் ராசிகள் முதல் வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள் சிறப்பான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும்.

எடுத்துக்கொண்ட இலக்குகளில் முன்னேற்றம் உண்டாகும். சொந்த தொழில் தொடங்குவதற்கு சிறப்பான காலமாக இது அமையும். உங்களுக்கு சாதகமற்ற சூழ்நிலைகள் அனைத்தும் உங்களை விட்டு விலகும். வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.

மிதுன ராசி

உங்கள் ராசியில் 12 வது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்ற இதனால் உங்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் வாழ்க்கையில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரம் முன்னேற்றம் இருக்கும். இதுவரை எதிர்காலம் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். மூத்த சகோதரர்களால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தை பொருத்தவரை நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

கடக ராசி

உங்கள் ராசியில் 11-வது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். அதனால் உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வேலை தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான பலன்கள் இருக்கும். நீதிமன்ற சிக்கல்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும் மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel