தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ஆடம்பரத்தை அள்ளி வீசும் சுக்கிரன்.. அதிர்ஷ்டத்தில் மூழ்கும் ராசிகள்.. பணத்தில் விளையாடுவது யார்

ஆடம்பரத்தை அள்ளி வீசும் சுக்கிரன்.. அதிர்ஷ்டத்தில் மூழ்கும் ராசிகள்.. பணத்தில் விளையாடுவது யார்

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 05, 2024 10:14 AM IST

Lord Venus: மிதுன ராசியில் அஸ்தமன நிலையில் பயணம் செய்து வந்த சுக்கிரன் கடந்த ஜூன் 30-ம் தேதி அன்று உதயமானார். சுக்கிரனின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பிடம் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர்.

ஆடம்பரத்தை அள்ளி வீசும் சுக்கிரன்.. அதிர்ஷ்டத்தில் மூழ்கும் ராசிகள்.. பணத்தில் விளையாடுவது யார்
ஆடம்பரத்தை அள்ளி வீசும் சுக்கிரன்.. அதிர்ஷ்டத்தில் மூழ்கும் ராசிகள்.. பணத்தில் விளையாடுவது யார்

Lord Venus: நவகிரகங்களில் ஆடம்பர நாயகனாக விளங்க கூடியவர் சுக்கிரன். இவர் செல்வம், செழிப்பு, காதல், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் சுக்கிரன். ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

சுக்கிர பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் மிதுன ராசியில் அஸ்தமன நிலையில் பயணம் செய்து வந்த சுக்கிரன் கடந்த ஜூன் 30-ம் தேதி அன்று உதயமானார். சுக்கிரனின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பிடம் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

துலாம் ராசி

 

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் உதயமாக உள்ளார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். எது கிடைத்தாலும் உங்களுக்கு சிறப்பான முறையில் கிடைக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். நல்ல மதிப்பெண்கள் பெற்று முன்னேற்றம் காண்பார்கள். மேற்படிப்புக்காக வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு அன்பு அதிகரிக்கும். வியாபாரம் சிறப்பாக இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.

கன்னி ராசி

 

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சுக்கிரன் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு தொழில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சிந்திக்கும் திறன் அதிகரிக்கும். எடுக்க முடிவுகள் சிறப்பான முறையில் அமையும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். நிதி நிலைமையில் நலம் முன்னேற்றம் இருக்கும். பண வரவில்லை இந்த குறையும் இருக்காது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணை முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பயணங்கள் நல்ல பலன்களை பெற்றுத் தரும்.

ரிஷப ராசி

 

சுக்கிரன் உங்கள் ராசிகள் இரண்டாவது வீட்டில் உதயமாகியுள்ளார். இதனால் உங்களுக்கு நிதி ஆதாயங்கள் அதிகரிக்கும். அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். பேச்சு திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக நடைபெறும். நிதி நிலைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். அதிர்ஷ்டம் உங்களை தேடி வர போகின்றது. யோகத்தின் வாசலில் நீங்கள் அமர போகின்றீர்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9