தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Sukra: பணக்குளத்தில் தலைகீழாக குதிக்கப் போகும் ராசிகள்.. சுக்கிரன் விளையாட்டு ஆரம்பம்.. நீங்க என்ன ராசி?

Lord Sukra: பணக்குளத்தில் தலைகீழாக குதிக்கப் போகும் ராசிகள்.. சுக்கிரன் விளையாட்டு ஆரம்பம்.. நீங்க என்ன ராசி?

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 07, 2024 09:50 AM IST

Lord Venus: சுக்கிரன் கடந்த மே 19ஆம் தேதி அன்று தனது சொந்தமான ராசியான ரிஷப ராசிக்குள் புகுந்தார். அதற்கு முன்பு மேஷ ராசியில் பயணம் செய்து வந்தார். சுக்கிர பகவானின் ரிஷப ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

பணக்குளத்தில் தலைகீழாக குதிக்கப் போகும் ராசிகள்.. சுக்கிரன் விளையாட்டு ஆரம்பம்.. நீங்க என்ன ராசி?
பணக்குளத்தில் தலைகீழாக குதிக்கப் போகும் ராசிகள்.. சுக்கிரன் விளையாட்டு ஆரம்பம்.. நீங்க என்ன ராசி?

அந்த வகையில் சுக்கிரன் கடந்த மே 19ஆம் தேதி அன்று தனது சொந்தமான ராசியான ரிஷப ராசிக்குள் புகுந்தார். அதற்கு முன்பு மேஷ ராசியில் பயணம் செய்து வந்தார். சுக்கிர பகவானின் ரிஷப ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை தரப்போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் முதல் வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான அற்புதங்கள் நடக்கப் போகின்றது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். காதல் திருமணம் உங்கள் வாழ்க்கையில் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். கூட்டுத்தொழில் வியாபாரம் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். பெட்ரோலின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

மிதுன ராசி

உங்கள் ராசியில் 11-வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். புதுமணத் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். 

வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். காதல் திருமணம் உங்களுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

கடக ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். அதனால் உங்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். 

பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உறவினர்களால் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்ப சூழல் உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.

சிம்ம ராசி

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு அனைத்து வகையிலும் இருந்தும் வெற்றி கிடைக்கும். துணிச்சல் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கக்கூடும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். மற்றவர்களிடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். 

குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களுக்கு தேடி வரும். பண வரவில் இருந்து குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலைமையில் ஏற்பட்ட வந்த சிக்கல்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel