தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Surya: குடை பிடித்து கொட்டும் சூரியன்.. பணத்தில் உருள போகும் ராசிகள்.. யாருக்கு யோகம் வருகுது?

Lord Surya: குடை பிடித்து கொட்டும் சூரியன்.. பணத்தில் உருள போகும் ராசிகள்.. யாருக்கு யோகம் வருகுது?

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 22, 2024 04:44 PM IST

Lord Surya: சூரிய பகவான் ரிஷப ராசியில் பயணம் செய்த நிலையில் கடந்த ஜூன் 15ஆம் தேதி அன்று புதன் பகவானின் சொந்தமான ராசிக்கான மிதுன ராசிகள் நுழைந்தார். சூரியன் மற்றும் புதன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்கள் என்கின்ற காரணத்தினால் அனைத்து ராசிகளுக்கும் நன்மைகள் கொடுக்கும்.

குடை பிடித்து கொட்டும் சூரியன்.. பணத்தில் உருள போகும் ராசிகள்.. யாருக்கு யோகம் வருகுது?
குடை பிடித்து கொட்டும் சூரியன்.. பணத்தில் உருள போகும் ராசிகள்.. யாருக்கு யோகம் வருகுது?

Lord Surya: நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக விளங்க கூடியவர் சூரிய பகவான். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் இவர். சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். நவகிரகங்களின் தலைவனாக விளங்கக்கூடிய சூரிய பகவான் மாதத்திற்கு ஒருமுறை இடமாறும்பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது.

அந்த வகையில் சூரிய பகவான் ரிஷப ராசியில் பயணம் செய்த நிலையில் கடந்த ஜூன் 15ஆம் தேதி அன்று புதன் பகவானின் சொந்தமான ராசிக்கான மிதுன ராசிகள் நுழைந்தார். சூரியன் மற்றும் புதன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்கள் என்கின்ற காரணத்தினால் சூரியபகவானின் மிதுன ராசிபலனும் நல்ல பலன்களை அனைத்து ராசிகளுக்கும் கொடுக்கும். இருப்பிடம் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்

மிதுன ராசி

உங்கள் ராசியில் சூரிய பகவான் முதல் வீட்டில் பயணம் செய்து வருகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கப்படும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும் தொழில் சிறப்பான பலன்கள் பெறும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். 

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

சிம்ம ராசி

உங்கள் ராசியில் 11-வது வீட்டில் சூரிய பகவான் பயணம் செய்து வருகின்றார், இதனால் உங்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வு கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் வெற்றி தரமாக முடிவடையும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் தொழில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களைத் தேடி வரும். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கன்னி ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சூரிய பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கக்கூடும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கப்படும். தொழிலில் சில முக்கியமான முடிவுகள் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றத்தை பெற்று தரும். 

நிதி நிலைமையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். விரும்பிய இடமாற்றம் உங்களுக்கு கிடைக்கக்கூடும் வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பங்குச்சந்தை முதலீடுகள் உங்களுக்கு நல்ல யோகத்தை பெற்று தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமானவர்களுக்கு வாழ்க்கை துணையின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். நண்பர்கள் உங்களுக்கு எப்போதும் உதவியாக இருப்பார்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9