தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See About The Zodiac Signs That Will Be Destroyed By The Setting Of Mercury

Mercury: புதன் சிதைக்கப் போவது உறுதி.. 3 ராசிகளுக்கு எச்சரிக்கை

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 21, 2024 02:00 PM IST

புதன் அஸ்தமனத்தால் சிதைய போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

புதன் பெயர்ச்சி
புதன் பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

இருப்பினும் இவருடைய தாக்கம் 12 ராசிகளுக்கும் மிகவும் அதிகமாக இருக்கும். புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இவர் பேச்சு, படிப்பு, வியாபாரம், கல்வி ஆகியவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.

நவகிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சனி பகவானின் சொந்த ராசியான மகர ராசியில் பயணம் செய்து வந்த புதன் பகவான் அந்த ராசியில் பிப்ரவரி 8ஆம் தேதி அன்று அஸ்தமனமானார்.

இவருடைய அஸ்தமனம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் புதன் அஸ்தமனம் ஆகின்றார். அதனால் உங்களுக்கு பல்வேறு விதமான தடைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சில காரியங்கள் நடப்பதற்கு காத்திருக்க வேண்டும். உயர் அலுவலர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் நஷ்டங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.

மிதுன ராசி

 

உங்கள் ராசிகள் எட்டாவது வீட்டில் புதன் பகவான் அஸ்தமனம் ஆகின்றார். அதனால் உங்களுக்கு பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தின் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கூட்டுத்தொழில் முயற்சிகளில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்க கூடும். வேலை செய்யும் இடத்தில் மன அழுத்தம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். நிதி இழப்புகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.

சிம்ம ராசி

 

உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் புதன் பகவான் அஸ்தமனம் ஆகின்றார். இதனால் உங்களுக்கு பணம் இழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிதி நெருக்கடி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் சண்டைகள் ஏற்பட்டால் அமைதியாக இருப்பது நல்லது. வாழ்க்கை துணையோடு கருத்து வேறுபாடுகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel