தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rahu Completion: பணக்கஷ்டத்தில் அழ வைக்கும் ராகு.. ரத்தக்கண்ணீர் ராசிகள்.. தப்பிக்கவே முடியாது மக்களே!

Rahu Completion: பணக்கஷ்டத்தில் அழ வைக்கும் ராகு.. ரத்தக்கண்ணீர் ராசிகள்.. தப்பிக்கவே முடியாது மக்களே!

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 04, 2024 02:53 PM IST

Lord Rahu: ராகு பகவானின் மீன ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தில் ஏற்படுத்தினாலும் இந்த டிசம்பர் மாதம் வரை மூன்று ராசிகளுக்கு சிக்கலை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

பணக்கஷ்டத்தில் அழ வைக்கும் ராகு.. ரத்தக்கண்ணீர் ராசிகள்.. தப்பிக்கவே முடியாது மக்களே!
பணக்கஷ்டத்தில் அழ வைக்கும் ராகு.. ரத்தக்கண்ணீர் ராசிகள்.. தப்பிக்கவே முடியாது மக்களே!

ராகு பகவான் 18 மாதங்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். சனிபகவானுக்கு பிறகும் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியில் பயணம் செய்ய தொடங்கினார். 

இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் ராகு பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் ராகு பகவானுக்கு சொந்த ராசி எதுவும் கிடையாது.

ராகு பகவானின் மீன ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தில் ஏற்படுத்தினாலும் இந்த டிசம்பர் மாதம் வரை மூன்று ராசிகளுக்கு சிக்கலை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

கன்னி ராசி

உங்கள் ராசிகள் ராகு பகவான் ஏழாவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு டிசம்பர் மாதம் வரை கஷ்டங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தொழிலில் புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. 

வியாபாரத்தில் சற்று மந்தமான சூழ்நிலை உருவாகும் காதல் வாழ்க்கை சிக்கலாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே சிக்கல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. திருமண வாழ்க்கையில் வாக்குவாதம் ஏற்படக்கூடும். குடும்பத்தினரிடம் மனக்கசப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. டிசம்பர் மாதம் வரை நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாக்கியுள்ளது.

தனுசு ராசி

உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் ராகு பகவான் பயணித்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வார்த்தைகளில் சிக்கல்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. மற்றவர்களிடம் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் எச்சரிக்கை தேவை. 

ஏனென்றால் உங்களுக்கு நாக்கில் ராகு விளையாடிக் கொண்டிருக்கிறார். பேச்சால் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். டிசம்பர் மாதம் வரை நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ராகு பகவானின் மோசமான விளையாட்டு ஆரம்பித்துவிட்டது.

கும்ப ராசி

சனி பகவானின் சொந்தமான ராசியாக விளங்கக்கூடிய உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் டிசம்பர் மாதம் வரை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. ஆடம்பர செலவுகள் உங்களுக்கு மிகப்பெரிய சிக்கல்களை ஏற்படுத்தும் பணவரவில் எந்த முன்னேற்றமும் இருக்காது. தொழிலில் சிக்கல்கள் ஏற்படக்கூடும். 

வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலை இருக்கக்கூடிய வாகனங்களில் செல்லும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத பயணங்களை தவிர்ப்பது நல்லது. புதிய முதலீடுகளை தற்போது தவிர்ப்பது உங்களுக்கு மிகவும் நல்லது. எந்த காரியம் செய்தாலும் அனுபவ சாலிகளின் ஆலோசனை பெற்று நடப்பது மிகவும் நல்லது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel