தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Horoscope: உடல் ஆரோக்கியத்தில் விளையாடும் செவ்வாய்.. கஷ்டம் உறுதி.. கண்ணீர் உறுதி.. கதறும் ராசிகள்

Horoscope: உடல் ஆரோக்கியத்தில் விளையாடும் செவ்வாய்.. கஷ்டம் உறுதி.. கண்ணீர் உறுதி.. கதறும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 09, 2024 02:51 PM IST

Lord Mars: செவ்வாய் பகவான் ஜூன் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் நுழைந்தார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு கஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

உடல் ஆரோக்கியத்தில் விளையாடும் செவ்வாய்.. கஷ்டம் உறுதி.. கண்ணீர் உறுதி.. கதறும் ராசிகள்
உடல் ஆரோக்கியத்தில் விளையாடும் செவ்வாய்.. கஷ்டம் உறுதி.. கண்ணீர் உறுதி.. கதறும் ராசிகள்

Lord Mars: நவக்கிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்நிலையில் செவ்வாய் பகவான் ஜூன் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் நுழைந்தார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு கஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் பன்னிரண்டாவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குடும்பத்தில் அவ்வப்போது சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்படக்கூடும். கணவன் மனைவிக்கு இடையே சங்கடங்கள் ஏற்படப்படும். உறவினர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

நண்பர்களால் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களுடன் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமற்ற சூழ்நிலையை உருவாக்குவார்கள் வியாபாரம் மற்றும் தொழில் மிகவும் மந்தமான சூழ்நிலையில் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்த வேண்டும்.

கன்னி ராசி

செவ்வாய் பகவான் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்களை கொடுக்கப் போகின்றார். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மருத்துவமனையில் செலவுகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களுடன் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

வேலை செய்யும் இடத்தில் வாக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடன் வேலை செய்பவர்களோடு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்பத்தில் சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்படக்கூடும். கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் அதிக கவனம் செலுத்துவது நல்லது.

மகர ராசி

உங்கள் ராசியில் நான்காவது பெட்டியில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உடல் நல கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மருத்துவமனை செலவுகள். அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மற்றவர்களிடம் பேசும்போது எச்சரிக்கை இருக்க வேண்டும். 

வார்த்தைகளால் உங்களுக்கு சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குடும்பத்தினரால் உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படக்கூடும். கணவன் மனைவிக்கிடையே சிக்கல்கள் ஏற்படக்கூடும். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரம் மந்தமாக இருக்கும். வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9