தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Surya: பண விளையாட்டு தொடங்கியது.. சூரியன் வந்துவிட்டார்.. அதிர்ஷ்டத்தில் குதிக்கும் ராசிகள்

Lord Surya: பண விளையாட்டு தொடங்கியது.. சூரியன் வந்துவிட்டார்.. அதிர்ஷ்டத்தில் குதிக்கும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 06, 2024 03:42 PM IST

Lord Surya: சூரிய பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

பண விளையாட்டு தொடங்கியது.. சூரியன் வந்துவிட்டார்.. அதிர்ஷ்டத்தில் குதிக்கும் ராசிகள்
பண விளையாட்டு தொடங்கியது.. சூரியன் வந்துவிட்டார்.. அதிர்ஷ்டத்தில் குதிக்கும் ராசிகள்

சூரிய பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கடந்த மே மாதம் 14ஆம் தேதி அன்று சூரிய பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு சென்றால் இது சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகவும் சூரியன் மற்றும் சுக்கிரன் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர்.

சூரிய பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். பொழுதுபோக்குகளில் உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். 

புதிய வாய்ப்புகளால் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கக்கூடும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

ரிஷப ராசி

உங்கள் ராசிகள் முதல் வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள் சிறப்பான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். 

தொழில் வாழ்க்கையில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அனைத்து காரியங்களும் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிய முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும்.

கடக ராசி

உங்கள் ராசியில் 11-வது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். அதனால் உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். நிதி நிலைமையில் நலம் முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வேலைக்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.

சிம்ம ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு எதிர்பார்த்த இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். 

நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel