தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Jackpot: பணத்தில் கண் கலங்க விடும் குரு.. யோகத்தில் விளையாடும் ராசிகள்.. அதிர்ஷ்டம் தேடி வருகுது

Jackpot: பணத்தில் கண் கலங்க விடும் குரு.. யோகத்தில் விளையாடும் ராசிகள்.. அதிர்ஷ்டம் தேடி வருகுது

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 13, 2024 11:38 AM IST

Jackpot: குரு பகவான் ஜூன் 13ஆம் தேதி இன்று ரோகிணி நட்சத்திரத்தில் நுழைகிறார். இவருடைய நட்சத்திர பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்க போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

பணத்தில் கண் கலங்க விடும் குரு.. யோகத்தில் விளையாடும் ராசிகள்.. அதிர்ஷ்டம் தேடி வருகுது
பணத்தில் கண் கலங்க விடும் குரு.. யோகத்தில் விளையாடும் ராசிகள்.. அதிர்ஷ்டம் தேடி வருகுது

குரு பகவான் ஒருவருடைய ஜாதகத்தில் நல்ல நிலைமையில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. குருபகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பயணம் செய்ய தொடங்கினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்.

குரு பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கிருத்திகை நட்சத்திரத்தில் பயணம் செய்து வரும் குரு பகவான் ஜூன் 13ஆம் தேதி இன்று ரோகிணி நட்சத்திரத்தில் நுழைகிறார். இவருடைய நட்சத்திர பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்க போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

குருபகவானின் நட்சத்திர பயணம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. நீங்கள் புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உங்களை தேடி பணம் வருவதற்கான சூழ்நிலைகள் அமையும். நிதிநிலைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் சிறப்பான சூழ்நிலைகள் உண்டாகும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

மிதுன ராசி

குருபகவானின் நட்சத்திர இடம் மாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப் போகின்றது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். பண வரவில்லை இந்த குறையும் இருக்காது. புதிய வேலை தொடர்பான அனைத்து முன்னேற்றங்களும் உங்களுக்கு கிடைக்கும். 

எடுத்துக்கொண்ட காரியங்களில் வெற்றி மற்றும் லாபம் கிடைக்கும். மன உளைச்சலால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். குரு பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றது.

கடக ராசி

உங்கள் ராசிகள் குரு பகவானின் நட்சத்திர இடமாற்றம் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் கொடுக்கப் போகின்றது. எடுத்துக் கொண்ட காரியங்களில் முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். 

பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலையில் நல்ல வெற்றி கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9