Lord Surya: அதிர்ஷ்டம் கொட்டும் சூரியன்.. மிதுனத்தில் பண மழை.. ஜாக்பாட் ராசிகள் இவர்கள்தான்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Surya: அதிர்ஷ்டம் கொட்டும் சூரியன்.. மிதுனத்தில் பண மழை.. ஜாக்பாட் ராசிகள் இவர்கள்தான்

Lord Surya: அதிர்ஷ்டம் கொட்டும் சூரியன்.. மிதுனத்தில் பண மழை.. ஜாக்பாட் ராசிகள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Published Jun 28, 2024 02:42 PM IST

Lord Surya:

அதிர்ஷ்டம் கொட்டும் சூரியன்.. மிதுனத்தில் பண மழை.. ஜாக்பாட் ராசிகள் இவர்கள்தான்
அதிர்ஷ்டம் கொட்டும் சூரியன்.. மிதுனத்தில் பண மழை.. ஜாக்பாட் ராசிகள் இவர்கள்தான்

இது போன்ற போட்டோக்கள்

நவகிரகங்களின் செயல்பாடுகளுக்கும் இவர்தான் ஒருமித்த காரணமாக இருந்து வருகிறார். சூரிய பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் சூரிய பகவான் கடந்த ஜூன் 15ஆம் தேதி அன்று புதன் பகவானின் சொந்தமான ராசியான மிதுன ராசியில் நுழைந்தார்.

சூரியன் மற்றும் புதன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். மிதுன ராசியில் சூரியன் நுழைந்துள்ள செயல்பாடு அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் சூரியன் மற்றும் புதன் நண்பர்கள் என்கின்ற காரணத்தினால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிப்பது உறுதி ஆகிவிட்டது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மிதுன ராசி

உங்கள் ராசியில் முதல் வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்க கூடும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். தொழில் ரீதியாக உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவு திருமணம் கைகூடும். நண்பர்களால் உதவி கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும் உயர் அலுவலர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.

சிம்ம ராசி

உங்கள் ராசிகள் 11 வது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. நிதில் அமையும் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணவரவில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். அந்தமான தொழில் உங்களுக்கு முன்னேற்றத்தை அளிக்கக்கூடும். குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். அரசியலில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கன்னி ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறைந்து நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முடிவுகள் உங்களுக்கு சாதகமாக முடிபடையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். விரும்பிய இடத்திற்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு அதிகமாக கிடைக்கும்..

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9