Zodiac Signs: பிளந்தெடுக்க போகும் சுக்கிரன்.. எல்லா இடத்திலும் சோகம்.. இந்த ராசிகள் கவனமாய் இருக்கணும்!
Lord Venus: சுக்கிரனின் கடக ராசி பயனுமானது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தர போகின்றது. அந்த வகையில் சுக்கிரனால் சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Venus: நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன். இவர் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிர பகவான் அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
இது போன்ற போட்டோக்கள்
Mar 16, 2025 05:05 PMமார்ச் 17ஆம் தேதி துலாம் முதல் மீன ராசி வரை.. ஆறு ராசிகளுக்கான பலன்கள்.. இதைக் கொஞ்சம் படிங்க!
Mar 16, 2025 04:07 PMமார்ச் 17ஆம் தேதி மேஷம் முதல் கன்னி ராசி வரை.. ஆறு ராசிகளுக்கான பலன்கள்.. இதைக் கொஞ்சம் படிங்க!
Mar 16, 2025 02:55 PMமீனத்துக்குச் சென்ற சூரியன்.. பிற்போக்காக திரும்பிய புதன்.. சிக்கிய பணத்தை மீட்டு சிம்மாசனம் போட்டு அமரப்போகும் ராசிகள்
Mar 16, 2025 01:08 PMசூரியன் - புதன் - சுக்கிரன் சேர்க்கை.. படிப்படியாக லாபம் பெறும் மூன்று அதிர்ஷ்டக்கார ராசிகள்
Mar 16, 2025 10:43 AMமீன ராசியில் புதன் வக்ர நிலை.. தொழில் நெருக்கடியை அடித்து ஓட விடப்போகும் 3 ராசிகள்
Mar 16, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : பண மழையில் நனையும் அதிர்ஷ்டம் உங்கள் பக்கமா.. எச்சரிக்கையா இருக்க வேண்டியது யார் பாருங்க!
இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்து.
அந்த வகையில் ஜூலை ஏழாம் தேதி அன்று மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு சுக்கிரன் சென்றார். வருகின்ற ஜூலை 31ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். அதற்கு பிறகு சூரிய பகவான் என்ற ராசிக்கான சிம்ம ராசியில் நுழைகின்றார்.
சுக்கிரனின் கடக ராசி பயனுமானது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தர போகின்றது. அந்த வகையில் சுக்கிரனால் சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மேஷ ராசி
உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் இருப்பினும் மன உளைச்சல் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட வேலைகளை நீங்கள் முழு கவனத்தோடு செய்ய வேண்டும்.
இல்லை என்றால் சிக்கல்கள் ஏற்படும். நிதி நிலைமையில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். பணவரவில் பலவீனமான சூழ்நிலைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தேவையில்லாத செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பணத்தை சேமிப்பதற்கான வாய்ப்புகள் கிடைப்பது சற்று தாமதமாகும். பல்வேறு விதமான சிக்கல்கள் உங்களுக்கு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
விருச்சிக ராசி
உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைப்பதற்கு சற்று தாமதமாகும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அவ்வப்போது சிக்கல்கள் ஏற்படக்கூடும். அதிகமான அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வியாபாரிகளுக்கு அதிக கஷ்டங்கள் உண்டாகும்.
தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். நிதி இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வாழ்க்கை துணையோடு கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். பெற்றோரின் உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
தனுசு ராசி
உங்கள் ராசிகள் எட்டாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு சிறிய வேலைகளை முடிப்பதற்கு கூட சற்று தாமதமாகும். கடின உழைப்பு முன்னேற்றத்தை பெறுவதற்கு சிறிது காலம் எடுத்துக் கொள்ளும். இலக்கை அடைய கடின உழைப்பு தேவைப்படுகிறது.
வேலை செய்யும் இடத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த காலத்தில் உங்களுக்கு வியாபாரத்தில் நஷ்டங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கடன் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
