தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Sani 2024: சனி விரட்டி விரட்டி கதறவிடப் போகும் ராசிகள்.. கவனம் தேவை.. இல்லை என்றால் கண்ணீர் உறுதி

Lord Sani 2024: சனி விரட்டி விரட்டி கதறவிடப் போகும் ராசிகள்.. கவனம் தேவை.. இல்லை என்றால் கண்ணீர் உறுதி

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 09, 2024 12:58 PM IST

Lord Sani: ஜூன் 29ஆம் தேதி அன்று சனிபகவான் கும்ப ராசியில் வக்கிரப் பெயர்ச்சி அடைந்தார். வருகின்ற நவம்பர் மாதம் வக்கிர நிவர்த்தி அடைகிறார். சனிபகவானின் பின்னோக்கிய பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

சனி விரட்டி விரட்டி கதறவிடப் போகும் ராசிகள்.. கவனம் தேவை.. இல்லை என்றால் கண்ணீர் உறுதி
சனி விரட்டி விரட்டி கதறவிடப் போகும் ராசிகள்.. கவனம் தேவை.. இல்லை என்றால் கண்ணீர் உறுதி

Lord Sani: நவகிரகங்களில் கர்ம நாயகனாக விளங்க கூடியவர் சனிபகவான். இவர் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடிய ஒரு இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சனி பகவான் மகர மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார்.

சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்ல அதிக காலம் எடுத்துக் கொள்கின்ற காரணத்தினால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பி கொடுக்கக் கூடியவர்.