தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Sani: சனி கண்ணீரில் கதற விட போகிறார்.. தலை தெறிக்க ஓடும் ராசிகள்.. சிக்கி சிதைவது உறுதி

Lord Sani: சனி கண்ணீரில் கதற விட போகிறார்.. தலை தெறிக்க ஓடும் ராசிகள்.. சிக்கி சிதைவது உறுதி

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 01, 2024 03:45 PM IST

lord Sani: சனிபகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கடந்த ஜூலை 29ஆம் தேதி அன்று சனி பகவான் கும்ப ராசியில் வக்கிர பயணத்தை மேற்கொண்டார். வரும் நவம்பர் மாதம் வரை இதே நிலையில் பயணம் செய்வார்.

சனி கண்ணீரில் கதற விட போகிறார்.. தலை தெறிக்க ஓடும் ராசிகள்.. சிக்கி சிதைவது உறுதி
சனி கண்ணீரில் கதற விட போகிறார்.. தலை தெறிக்க ஓடும் ராசிகள்.. சிக்கி சிதைவது உறுதி

சனிபகவான் மகர மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். கடந்த 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் இந்த 2024 ஆம் ஆண்டு சனி பகவானின் ஆண்டாக கருதப்படுகிறது.

சனிபகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கடந்த ஜூலை 29ஆம் தேதி அன்று சனி பகவான் கும்ப ராசியில் வக்கிர பயணத்தை மேற்கொண்டார். வரும் நவம்பர் மாதம் வரை இதே நிலையில் பயணம் செய்வார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சிக்கலை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ரிஷப ராசி

சனிபகவான் உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் பின்னோக்கிய பயணத்தை மேற்கொண்டுள்ளார். இதனால் உங்களுக்கு தொழில் ரீதியாக சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. சிலவேளைகளில் உங்களுக்கு பல்வேறு விதமான தடைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எதிர்பார்த்த வெற்றி கிடைப்பதற்கு சற்று தாமதமாகும். 

கடினமாக உழைத்தாலும் வெற்றி கிடைப்பதற்கு தாமதமாகும். வியாபாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் இருக்காது. தொழிலில் மந்தமான சூழ்நிலை இருக்கும். புதிய முயற்சிகளை தற்போது கைவிடுவது நல்லது உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நிதி நிலைமையில் உங்களுக்கு சோகமான சூழ்நிலை அமையும். குடும்ப வாழ்க்கையில் அவ்வப்போது சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்படக்கூடும்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் 11-வது வீட்டில் சனிபகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ளார். இதனால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைப்பதற்கு சட்ட தாமதமாகும். வேலைகள் இருக்கக்கூடிய தடைகள் உங்களுக்கு இன்னும் அதிகமாகும். கடினமாக உழைத்தாலும் வெற்றி கிடைப்பதற்கு சற்று தாமதமாகும். நிதி நிலைமையில் உங்களுக்கு பலவீனமான சூழ்நிலைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. 

தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உணவு பழக்க வழக்கங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வாழ்க்கை முறையில் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. பெற்றோரின் உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

மிதுன ராசி

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சனிபகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களோடு பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். நண்பர்களால் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. 

குடும்பத்தில் சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. காதல் வாழ்க்கையில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலை இருக்கும். பணவரவில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் தொடரும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9