தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Rahu: தூக்கி அடிக்கப் போகும் ராகு.. கஷ்டம் விளையாடுவது உறுதி.. சங்கடம் எந்த ராசிக்கு?

Lord Rahu: தூக்கி அடிக்கப் போகும் ராகு.. கஷ்டம் விளையாடுவது உறுதி.. சங்கடம் எந்த ராசிக்கு?

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 06, 2024 03:02 PM IST

Lord Rahu: ராகு பகவானால் கஷ்டத்தை அனுபவிக்க போகும் ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

தூக்கி அடிக்கப் போகும் ராகு.. கஷ்டம் விளையாடுவது உறுதி.. சங்கடம் எந்த ராசிக்கு?
தூக்கி அடிக்கப் போகும் ராகு.. கஷ்டம் விளையாடுவது உறுதி.. சங்கடம் எந்த ராசிக்கு?

ராகு பகவான் கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் தனது ராசியை மாற்றினார். தற்போது ராகு பகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

கன்னி ராசி

உங்கள் ராசிகள் ஏழாவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். அதனால் இந்த ஆண்டு இறுதி வரை உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் தொழிலில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வியாபாரம் சற்று மந்தமாக இருக்கும். 

மற்றவர்களுடன் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் திருமண வாழ்க்கை சிக்கலாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் உங்களுக்கு மனக்கசப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வெளியே செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும்.

தனுசு ராசி

உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பண சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

குடும்ப வாழ்க்கையில் உங்களுக்கு மன உளைச்சல் அதிகம் ஏற்படும். இந்த ஆண்டு இறுதி வரை நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களுடன் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். வாயால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. பிரச்சனைகள் தீர்வதற்கு நீங்கள் அமைதியாக இருந்தால் போதும்.

கும்ப ராசி

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு இறுதிவரை உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உங்களுக்கு நிதி ரீதியாக சிக்கல்கள் அதிகம் ஏற்படும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். செலவுகள் அதிகரிக்க கூடிய சூழ்நிலைகள் அமைய உள்ளது. 

புதிய முதலீடுகளை தற்போது தவிர்ப்பது நல்லது. அனுபவ சாலிகளின் ஆலோசனையை பெற்று நீங்கள் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிப்பது நல்லது. பெரிய நிதி இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருங்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel