Lord Rahu: மன உளைச்சல் தரப்போகும் ராகு.. டிசம்பர் வரை கதறல் உறுதி.. ஓடினாலும் விடமாட்டார் தப்பிச்சுக்கோங்க
Lord Rahu: இருக்கும் இடத்தைப் பொறுத்து ராகு பகவானின் பலன்கள் மாற்றமடையும். அந்த வகையில் மீன ராசியில் பயணம் செய்து வரும் ராகு பகவானால் ஒரு சில ராசிகள் கஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Lord Rahu: ராகு பகவான் நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்கி வருகின்றார். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். சனிபகவானுக்கு பிறகும் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகின்றார். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு சொல்ல ராகு பகவான் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். ராகு பகவான் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் தனது இடத்தை மாற்றும் மீன ராசியில் நுழைந்தார்.
இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் ராகு பகவான் பயணம் செய்வார். ராகு பகவானின் இடமாற்றம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ராகு கேது இருவரும் இணைபிரியாத கிரகங்களாக விளங்கி வருகின்றனர். தனித்தனியாக ராசிகளில் பயணம் செய்தாலும் இவர்களுடைய செயல்பாடு என்பது ஒரே மாதிரியாக இருக்கும்.
இருக்கும் இடத்தைப் பொறுத்து ராகு பகவானின் பலன்கள் மாற்றமடையும். அந்த வகையில் மீன ராசியில் பயணம் செய்து வரும் ராகு பகவானால் ஒரு சில ராசிகள் கஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
கன்னி ராசி
உங்கள் ராசிகள் ஏழாவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தொழில் சற்று மந்தமாக இருக்கும். வியாபாரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். காதல் வாழ்க்கையில் அந்த அளவிற்கு மகிழ்ச்சி இருக்காது. குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. திருமண வாழ்க்கையில் அவ்வப்போது சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்படக்கூடும். உறவினர்களுக்கு இடையே மனக்கசப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. டிசம்பர் மாதம் வரை நீங்கள் மிகவும் கவனமாக இருப்பது நல்லது.
தனுசு ராசி
உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் வழக்கத்தை விட பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆடம்பர செலவுகள் செய்வதற்கான சூழ்நிலைகள் அமையும். பண சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்ப வாழ்க்கையில் மன உளைச்சல் அதிகம் ஏற்படும். டிசம்பர் மாதம் வரை நீங்கள் உங்களுடைய வாயை கட்டுப்படுத்த வேண்டும். வார்த்தைகளால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. பேச்சால் உங்களுக்கு அதிகம் பிரச்சனைகள் வரக்கூடும். எந்த சிக்கல்களுக்கும் தீர்வு காண்பதற்கு நீங்கள் வார்த்தைகளை கொடுக்காமல் இருக்க வேண்டும். மிகவும் கவனமாக இருப்பது நல்லது.
கும்ப ராசி
உங்கள் ராசிகள் இரண்டாவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். அதிக செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. புதிய முதலீடுகள் செய்ய நினைத்தால் சற்று தாமதமாக செய்வது நல்லது. அனுபவசாலிகளின் ஆலோசனைகளை நீங்கள் பெற்றுக் கொள்வது நல்லது. பெரிய நிதி இழப்பை நீங்கள் சந்திப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது எனவே எச்சரிக்கையாக இருங்கள்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
