Leo: உடம்ப பாத்துக்கோங்க ராசிகளே.. சிம்மத்தில் சூறையாட்டம் போடும் சூரியன்.. இந்த ராசிகள் மோசமான பாதிப்பை சந்திப்பார்கள்-here we will see about the zodiac signs that will be affected by the transit of lord surya in leo luck - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Leo: உடம்ப பாத்துக்கோங்க ராசிகளே.. சிம்மத்தில் சூறையாட்டம் போடும் சூரியன்.. இந்த ராசிகள் மோசமான பாதிப்பை சந்திப்பார்கள்

Leo: உடம்ப பாத்துக்கோங்க ராசிகளே.. சிம்மத்தில் சூறையாட்டம் போடும் சூரியன்.. இந்த ராசிகள் மோசமான பாதிப்பை சந்திப்பார்கள்

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 26, 2024 12:55 PM IST

Lord Sun: சூரிய பகவானின் சிம்ம ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் பல சங்கடமான சூழ்நிலைகளை சந்திக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Leo: உடம்ப பாத்துக்கோங்க ராசிகளே.. சிம்மத்தில் சூறையாட்டம் போடும் சூரியன்.. இந்த ராசிகள் மோசமான பாதிப்பை சந்திப்பார்கள்
Leo: உடம்ப பாத்துக்கோங்க ராசிகளே.. சிம்மத்தில் சூறையாட்டம் போடும் சூரியன்.. இந்த ராசிகள் மோசமான பாதிப்பை சந்திப்பார்கள்

சூரிய பகவான் நவகிரகங்களின் தலைவனாக திகழ்ந்து வருகின்ற காரணத்தினால் இவர் இடமாற்றம் செய்யும் பொழுது அதனுடைய தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் சூரிய பகவான் கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி அன்று தனது சொந்தமான ராசியான சிம்ம ராசியில் நுழைந்தார்.

சூரிய பகவானின் சிம்ம ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் பல சங்கடமான சூழ்நிலைகளை சந்திக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மகர ராசி

சூரிய பகவான் உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் ஆட்சி செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பல சவாலான சிக்கல்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் உங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

இதயம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உறவினர்களோடு பேசும்போது கவனமாக இருக்க வேண்டும் செய்யும் செயல் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். இல்லை என்றால் நீங்கள் சிக்கல்களை சந்திப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

திடீரென தேவையில்லாத செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தேவையற்ற பயணங்களை குறைத்துக் கொள்வது நல்லது. வெளியே சாப்பிடுவதை குறைத்துக்கொள்ள வேண்டும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படக்கூடும். 

திருமணமாகாதவர்களுக்கு பரிகாரங்கள் செய்தால் சிறிது முன்னேற்றம் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் உயர அலுவலர்களோடு பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சக ஊழியர்களால் உங்களுக்கு சிக்கல் உள்ள ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

கும்ப ராசி

சூரிய பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்களை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய தருணம் இது. தொழில் மற்றும் வியாபாரத்தில் சற்று மந்தமான சூழ்நிலையில் இருக்கும். புதிய முயற்சிகளை தற்போது தவிர்ப்பது நல்லது. 

புதிய முதலீடுகளால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கடன் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். உறவினர்களால் சிக்கல்கள் ஏற்படக்கூடும். 

எதிரிகளால் தொந்தரவுகள் ஏற்படக்கூடும். வார்த்தைகளின் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வாய்ப்புகள் கிடைப்பதற்கு சற்று தாமதமாகவும் குடும்பத்தினரிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

எடுத்துக்கொண்ட காரியங்கள் முடிவதற்கு சற்று தாமதமாகும். திருமண வாழ்க்கையில் தொடர்ந்து சிக்கல்கள் வந்து கொண்டே இருக்கும். தேவையற்ற மோதல்கள் மற்றும் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. புதிய முடிவுகள் எடுக்கும் போது நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9