Suriyan Budhan: சூரியனோடு புதைந்த புதன்.. மிதுனத்தில் பணம் கொட்டும் ராசிகள்.. உங்கள் ராசி எது?
Lord Mercury: ஜூன் 14ஆம் தேதி அன்றுபுதன் பகவான் மிதுன ராசியில் நுழைகின்றார். அதற்கு பிறகு சூரிய பகவான் ஜூன் 15ஆம் தேதி அன்று மிதுன ராசியில் நுழைகிறார். இதனால் மிதுன ராசியில் சூரியன் மற்றும் புதன் ஒன்றுசேர்கின்றனர் இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும்.
நவ கிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை இடத்தை மாற்றக் கூடியவர். சூரிய பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார்.
நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர்புதன் பகவான். இவர் பேச்சு, நரம்பு, வியாபாரம், கல்வி, புத்திசாலித்தனம், உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
வருகின்ற ஜூன் 14ஆம் தேதி அன்றுபுதன் பகவான் மிதுன ராசியில் நுழைகின்றார். அதற்கு பிறகு சூரிய பகவான் ஜூன் 15ஆம் தேதி அன்று மிதுன ராசியில் நுழைகிறார். இதனால் மிதுன ராசியில் சூரியன் மற்றும் புதன் ஒன்றுசேர்கின்றனர் இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் தாக்கத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காண்போம்.
ரிஷப ராசி
சூரியன் மற்றும் புதன் இவர்கள் செயற்கை உங்களுக்கு நன்மைகளை கொடுக்கப் போகின்றது. தனிப்பட்ட வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். ஆடம்பர வாழ்க்கையில் உங்களுக்கு எந்த குறையும் இருக்காது. நிறைவான குடும்ப மகிழ்ச்சி உங்களுக்கு இருக்கும்.
நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். போதுமான செல்வம் உங்களுக்கு அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நம்பிக்கை கூறிய வாய்ப்புகள் உங்களுக்கு தேடி வரும் மற்றவர்களிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.
மிதுன ராசி
சூரியன் மற்றும் புதன் சேர்ந்து உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றனர். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். அனைத்து காரியங்களிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.
நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மற்றவர்களிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். மற்றவர்களின் கவனத்தில் ஈர்க்கக்கூடிய அளவிற்கு உங்களுடைய செயல் இருக்கும். கருத்து வேறுபாடுகள் குறையும். குடும்பத்தின் மகிழ்ச்சி அதிகரிக்கும்m நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். நண்பர்களால் உதவி கிடைக்கும்.
சிம்ம ராசி
சூரியன் மற்றும் புதன் உங்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றனர். எதிர் நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கையில் அனைத்து விதமான மகிழ்ச்சிகளும் உங்களுக்கு கிடைக்கும். நீண்ட காலம் நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும்.
குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்களை தேடி வர போகின்றது நண்பர்களால் உதவி கிடைக்கும். உறவினர்களால் உங்களுக்கு ஆதரவு உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9