3 Bad Rasis: தலையில் அடி விழப் போகும் ராசிகள்.. சூரியன் கழற்றி விட வருகிறார்.. 3 ராசிகள் ரொம்ப கவனம் தேவை
3 Bad Rasis: சூரிய பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைத்தாலும் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலைகள் உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

3 Bad Rasis: நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சூரிய பகவான் நவகிரகங்களின் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக திகழ்ந்து வருகின்றார்.
இது போன்ற போட்டோக்கள்
May 15, 2025 10:16 AMபணமழை கொட்டித் தீர்க்கப் போகும் ராசிகள்.. புதன் மேஷத்தில் நுழைகிறார்.. உங்க ராசி என்ன?
May 15, 2025 09:52 AMராகு காலம் பொறக்குது.. ராகு காலம் பொறக்குது.. இந்த ராசிகள் மீது பண மழை கொட்ட போகுது!
May 15, 2025 09:30 AMசனி தந்தால் யார் தடுப்பார்.. பண லாபம்.. பதவி உயர்வு என பொன்னான காலம் உங்களுக்கா.. ஜாலியோ ஜாலிதா!
May 15, 2025 07:30 AMகுரு பெயர்ச்சி பலன்கள்: குரு கொடூர யோகம் ஆரம்பம்.. கஷ்டத்தில் கதறப்போகும் ராசிகள்.. அந்த ராசி தானா நீங்க?
May 15, 2025 07:02 AMதடைகள் நீங்கி, அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா.. தொட்டது துலங்க வியாழக்கிழமை விஷ்ணு வழிபாட்டோடு இதை செய்ய மறந்துடாதீங்க!
May 15, 2025 06:30 AMபணம் கொட்டும்.. பதவி உயர்வு.. வெற்றி மேல் வெற்றி தரும் கேது பகவான்.. எந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பாருங்க!
இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. இந்நிலையில் தற்போது கடக ராசியில் சூரிய பகவான் பயணம் செய்து வருகின்றார். சூரிய பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைத்தாலும் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலைகள் உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மேஷ ராசி
சூரிய பகவான் உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். அதனால் உங்களுக்கு சற்று மோசமான சூழ்நிலை இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அவ்வப்போது சிக்கல்கள் ஏற்படக்கூடும். பெற்றோரின் உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உயர் அலுவலர்களோடு வாக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சக ஊழியர்களால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படக்கூடும். வியாபாரம் மற்றும் தொழில் சற்று மந்தமாக இருக்கும். மற்றவர்களிடம் பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சிம்ம ராசி
உங்கள் ராசியில் 12-வது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையோடு செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் நஷ்டமான சூழ்நிலை உண்டாகும். தொழிலில் பெரிய செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
வெளியே சாப்பிடுவதை தவிர்த்து விடுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வணிகத்தில் புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. பல்வேறு விதமான இழப்புகள் உங்களுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வெளிநாடு செல்லும் எண்ணம் இருந்தால் சற்று தள்ளி வைப்பது உங்களுக்கு நல்லது.
கும்ப ராசி
உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு எதிரிகளால் அவ்வப்போது சிக்கல்கள் ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் அதிகம் கவனமாக இருக்க வேண்டும். வயிறு சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருப்பது நல்லது.
தற்போது பயணங்களை தவிர்ப்பது நல்லது. இல்லையென்றால் விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கடன் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படக்கூடும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் பல ஏற்ற தாழ்வுகளை சந்திக்க நேரிடும். நீங்கள் அதீத கவனம் செலுத்தி உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வது நல்லது. புதிய நண்பர்களை தவிர்ப்பது நல்லது. கூட்டுத் தொழில் வியாபாரங்கள் தற்போது செய்வதற்கு சரியான நேரம் கிடையாது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
