தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Mars: கஷ்டத்தில் கவிழப்போகும் ராசிகள்.. கதறவிடப் போகிறார் செவ்வாய்.. சிக்கியது நீங்கள் தானா?

Lord Mars: கஷ்டத்தில் கவிழப்போகும் ராசிகள்.. கதறவிடப் போகிறார் செவ்வாய்.. சிக்கியது நீங்கள் தானா?

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 21, 2024 03:36 PM IST

Lord Mars: செவ்வாய் பகவான் தன்னுடைய சொந்தமான ராசிக்கு வந்துள்ள காரணத்தினால் அவருடைய பலம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ருச்சக யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

கஷ்டத்தில் கவிழப்போகும் ராசிகள்.. கதறவிடப் போகிறார் செவ்வாய்.. சிக்கியது நீங்கள் தானா?
கஷ்டத்தில் கவிழப்போகும் ராசிகள்.. கதறவிடப் போகிறார் செவ்வாய்.. சிக்கியது நீங்கள் தானா?

Lord Mars: நவகிரகங்களில் தளபதி ஸ்தானத்தில் இருக்கக்கூடியவர் செவ்வாய் பகவான். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை, தைரியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

செவ்வாய் பகவான் கடந்த ஜூன் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் நுழைந்தார். இது இவருடைய சொந்தமான ராசியாகும். செவ்வாய் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் பகவான் மேஷ ராசியின் அதிபதியாகத் திகழ்ந்து வருகின்றார்.

செவ்வாய் பகவான் தன்னுடைய சொந்தமான ராசிக்கு வந்துள்ள காரணத்தினால் அவருடைய பலம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ருச்சக யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் 12 வது வீட்டில் செவ்வாய் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

வியாபாரம் மந்தமாக இருக்கும் தொழிலில் அவ்வப்போது சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கண் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது வாழ்க்கை துணையோடு பேசுவதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தினரிடம் பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கன்னி ராசி

உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் அவ்வப்போது சில சிக்கல்கள் ஏற்படக்கூடும். சிறப்பு கவனம் செலுத்தி உங்களது உடலை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். வியாபாரம் மற்றும் தொழிலில் மந்தமான சூழ்நிலை இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களோடு வாக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். கணவன் மனைவிக்கிடையே சண்டைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குடும்பத்தினர் இடையே சச்சரவுகள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும். எடுத்துக்கொண்ட காரியங்கள் முடிவதற்கு சட்ட தாமதமாகும். புதிய முதலீடுகளை தற்போது தவிர்ப்பது நல்லது. நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மகர ராசி

உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் பயணம் செய்ய தொடங்கியுள்ளார். செவ்வாய் பகவான் இதனால் உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைய கூடிய சூழ்நிலைகள் அமையும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை அமையும். நீங்கள் அதிக ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் தற்போது புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. வணிகம் சற்று மந்தமாக இருக்கும். 

புதிய முதலீடுகள் செய்வதை தற்போது தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தை அதிக கவனம் செலுத்தி பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் யாரையும் நம்பாமல் இருப்பது நல்லது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9