Sani: சனி காகம் ஏறினார்.. படையலுக்கு தயாராகும் சூரியன்.. கொட்டும் பணமழை.. வாழப்போகும் ராசிகள்..-here we will see about the zodiac signs that saturn and sun are going to enjoy together - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sani: சனி காகம் ஏறினார்.. படையலுக்கு தயாராகும் சூரியன்.. கொட்டும் பணமழை.. வாழப்போகும் ராசிகள்..

Sani: சனி காகம் ஏறினார்.. படையலுக்கு தயாராகும் சூரியன்.. கொட்டும் பணமழை.. வாழப்போகும் ராசிகள்..

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 11, 2024 05:56 PM IST

Saturn and Sun: சூரியன் மற்றும் சனி இவர்கள் இருவரும் 180 டிகிரி இடைவெளியில் ஏழாவது வீட்டிற்கு செல்கின்றனர். இந்த இரண்டு கிரகங்களும் ஒருவரை ஒருவர் நோக்குகின்ற காரணத்தினால் அதனுடைய தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பிடம் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்க போகின்றனர்.

சனி காகம் ஏறினார்.. படையலுக்கு தயாராகும் சூரியன்.. கொட்டும் பணமழை.. வாழப்போகும் ராசிகள்..
சனி காகம் ஏறினார்.. படையலுக்கு தயாராகும் சூரியன்.. கொட்டும் பணமழை.. வாழப்போகும் ராசிகள்..

இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்பட்டது. நவகிரகங்களில் நீதிமனாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். சனி ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். தற்போது 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

சூரிய பகவான் வருகின்ற ஆகஸ்ட் 16ஆம் தேதி அன்று சிம்ம ராசியில் நுழைகின்றார். அதற்குப் பிறகு சூரியன் மற்றும் சனி இவர்கள் இருவரும் 180 டிகிரி இடைவெளியில் ஏழாவது வீட்டிற்கு செல்கின்றனர். இந்த இரண்டு கிரகங்களும் ஒருவரை ஒருவர் நோக்குகின்ற காரணத்தினால் அதனுடைய தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பிடம் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

கடக ராசி

சூரியன் மற்றும் சனி யோகத்தால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றது. இந்த ராசிக்காரர்களுக்கு மகத்தான வெற்றி கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

அதிர்ஷ்டத்தின் விளைவுகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்க கூடும். பல வருடங்களாக உங்களுக்கு சிக்கல்கள் இருந்தது தற்போது நிவர்த்தி அடையும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.

சிம்ம ராசி

சனி மற்றும் சூரியன் பார்வை உங்களுக்கு அதிர்ஷ்டத்தை முழுமையாக கிடைக்கப் போகின்றது. நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய திட்டங்கள் உங்களுக்கு நல்ல யோகத்தை பெற்று தரும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். தொழிலில் நலம் முன்னேற்றம் இருக்கும்.

வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும். கூட்டுத் தொழில் முயற்சிகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். அனைத்து காரியங்களிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

தனுசு ராசி

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சனி மற்றும் சூரியன் சேர்க்கின்றனர். எதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்க போகிறது. அனைத்து முயற்சிகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மற்றவர்களிடத்தில் உங்களுக்கு மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.

பழைய நண்பர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும். பெரிய நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். பழைய நண்பர்கள் உங்களுக்கு தற்போது மிகவும் உதவியாக இருப்பார்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தொடர்புடையை செய்திகள்