தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Luck: குரு பண குற்றாலத்தில் குளிக்கும் ராசிகள்.. கொட்டும் யோகம் கதவை தட்டும்.. யோக ராசிகள்

Guru Luck: குரு பண குற்றாலத்தில் குளிக்கும் ராசிகள்.. கொட்டும் யோகம் கதவை தட்டும்.. யோக ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 04, 2024 11:41 AM IST

Lord Guru: குருபகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஜூன் 13ஆம் தேதி அன்று குரு பகவான் ரோகிணி நட்சத்திரத்தில் நுழைந்தார். வருகின்ற ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை குரு பகவான் இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார்.

குரு பண குற்றாலத்தில் குளிக்கும் ராசிகள்.. கொட்டும் யோகம் கதவை தட்டும்.. யோக ராசிகள்
குரு பண குற்றாலத்தில் குளிக்கும் ராசிகள்.. கொட்டும் யோகம் கதவை தட்டும்.. யோக ராசிகள்

Guru Luck: நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் தன்னம்பிக்கை, செல்வம், செழிப்பு, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகின்றார். குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

குரு பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இந்நிலையில் குரு பகவான் கடந்த மே ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு சென்றார்.

குருபகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஜூன் 13ஆம் தேதி அன்று குருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் நுழைந்தார். வருகின்ற ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை குரு பகவான் இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார். இது சந்திர பகவானின் சொந்தமான நட்சத்திரமாகும். குரு பகவானின் ரோகிணி நட்சத்திர பயணமானது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜயோகத்தை கொடுத்துள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

சிம்ம ராசி

குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு மிகப்பெரிய மாற்றங்கள் உருவாகப் போகின்றது. புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். 

சக ஊழியர்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுக் கொடுப்பார்கள். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். வெளிநாட்டில் வேலை செய்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகன வாங்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.

கன்னி ராசி

குரு நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். குரு பகவானின் பார்வை உங்கள் மீது விழுகின்ற காரணத்தினால் பல்வேறு விதமான நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். அதிக அலைச்சல் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். 

நிதி ஆதாயங்கள் உங்களுக்கு கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். புதிதாக திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

துலாம் ராசி

குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான யோகத்தை கொடுக்கப் போகின்றது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். 

உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நிதி நிலைமையில் வழக்கத்தை விட முன்னேற்றம் அதிகம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9