தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ராகு விரட்டி விரட்டி அடிப்பார்.. செவ்வாயும் சேர்ந்து விட்டார்.. அங்காரக யோகத்தில் அடி வாங்க போகும் ராசிகள்

ராகு விரட்டி விரட்டி அடிப்பார்.. செவ்வாயும் சேர்ந்து விட்டார்.. அங்காரக யோகத்தில் அடி வாங்க போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 05, 2024 04:17 PM IST

Rahu and Mars: ராகு மற்றும் செவ்வாய் இவர்கள் இருவரும் ஒன்று சேர்கின்றனர். இவர்களுடைய சேர்க்கை அங்காரக யோகத்தை உருவாக்கியுள்ளது. இதனால் சில ராசிகள் ஆபத்தை சந்திக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

செவ்வாய் பெயர்ச்சி
செவ்வாய் பெயர்ச்சி

ராகு பகவான் 18 மாதங்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் மீன ராசியில் ராகு பகவான் நுழைந்தார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்.

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகிறார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் தன்னம்பிக்கை, துணிவு, விடாமுயற்சி, வீரம், வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். வரும் ஏப்ரல் 22ஆம் தேதி அன்று செவ்வாய் பகவான் மீன ராசியில் நுழைகின்றார்.

இதன் காரணமாக ராகு மற்றும் செவ்வாய் இவர்கள் இருவரும் ஒன்று சேர்கின்றனர். இவர்களுடைய சேர்க்கை அங்காரக யோகத்தை உருவாக்கியுள்ளது. இதனால் சில ராசிகள் ஆபத்தை சந்திக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

 

உங்கள் ராசியில் 12-வது வீட்டில் ராகு செவ்வாய் சேர்க்கை உருவாக்கி உள்ளது. இதனால் உங்களுக்கு பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மற்றவர்களிடத்தில் அதிகமாக பேசுவதை கட்டுப்படுத்த வேண்டும். வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் அவ்வப்போது மகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கவனமாக இருக்க வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே சண்டைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

கன்னி ராசி

 

உங்கள் ராசியில் அங்காரக யோகம் ஐந்தாவது வீட்டில் உருவாகியுள்ள காரணத்தினால் திருமண வாழ்க்கையில் பல்வேறு விதமான சிக்கல் சொல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மற்றவர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பல்வேறு விதமான சிக்கல்கள் உங்களைத் தேடி வரும். கூட்டு தொழில் முயற்சிகளை தற்போது தவிர்ப்பது நல்லது. வணிகத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் மந்தமான சூழ்நிலை உருவாகும். குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

கும்பராசி

 

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் அங்கார வியூகம் உருவாகியுள்ளது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. பண இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. புதிய வேலை தொடங்குவதை தற்போது தவிர்ப்பது நல்லது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel