தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See About The Zodiac Signs That Rahu And Ketu Together Will Give Luck

ராகு கேது பெயர்ச்சி.. அதிர்ஷ்டம் கிடைக்கும்.. பணமழை கொட்டும் யோக ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 17, 2024 05:39 PM IST

Rahu and Ketu: ராகு கேது 2024 ஆம் ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்கள் இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ராகு கேது இடமாற்றம் ஒரு சில ராசிகளுக்கு ராஜயோகத்தை தரப்போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ராகு கேது
ராகு கேது

ட்ரெண்டிங் செய்திகள்

சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய ராகு மற்றும் கேது ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசுக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியிலும் கேது பகவான் கன்னி ராசியிலும் நுழைந்தார்கள்.

இந்த 2024 ஆம் ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்கள் இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ராகு கேது இடமாற்றம் ஒரு சில ராசிகளுக்கு ராஜயோகத்தை தரப்போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

துலாம் ராசி

 

ராகு பகவான் உங்களுடைய ராசியில் ஆறாவது ஸ்தானத்திலும் கேது பகவான் 12-வது ஸ்தானத்திலும் பயணம் செய்து வருகின்றனர். இதுவரை உங்களுக்கு சிக்கலாக இருந்த அனைத்து விஷயங்களும் நிவர்த்தியாகும். எதிரிகளால் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் குறையும். கடன் சிக்கல்கள் அனைத்தும் விலகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

விருச்சிக ராசி

 

ராகு பகவான் ஐந்தாம் வீட்டிலும், கேது பகவான் 11 ஆம் வீட்டிலும் பயணம் செய்து வருகின்றனர். இதனால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைத்துள்ளது. வாழ்க்கையில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். பயணங்கள் நல்ல பலன்களை தரும். தேவையற்ற செலவுகள் குறையும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. முன்னோர்களால் உங்களுடைய ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். தெய்வ வழிபாடு மிகவும் அவசியமாகும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.

தனுசு ராசி

 

ராகு பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிதாக சொத்துக்கள் சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

மகர ராசி

 

ராகு கேது உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றனர். யோகம் உங்களை தேடி வருகின்றது. வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். உங்கள் தன்னம்பிக்கையால் நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது. புதிய முயற்சிகள் கைகூடும். புதிய திட்டங்கள் உங்களுக்கு ஏற்றவாறு நடக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

WhatsApp channel