Mercury and Sun: விளையாட்டை தொடங்கிய புதன் சூரியன்.. தலைகீழாக பண கடலின் குதிக்க போகும் ராசிகள்.. நீங்க என்ன ராசி?
Mercury and Sun: புதன் பகவான் வருகின்ற ஜூன் 14ஆம் தேதி அன்று மிதுன ராசியில் நுழைகின்றார். அதற்கு பிறகு ஜூன் 15ஆம் தேதி அன்று சூரிய பகவான் மிதுன ராசியில் நுழைகின்றார். இவர்கள் இருவரும் மிதுன ராசியில் ஒன்றாக பயணிக்க போகின்றனர்.
Mercury and Sun: நவ கிரகங்களில் இளவரசனாக திகழ்ந்து வரக்கூடியவர் புதன் பகவான். இவர் பேச்சு, வியாபாரம், நரம்பு, கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்திருக்கின்றார். புதன் பகவான் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளின் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.
நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். சூரிய பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக இவர் விளங்கி வருகின்றார்.
இந்நிலையில் புதன் பகவான் வருகின்ற ஜூன் 14ஆம் தேதி அன்று மிதுன ராசியில் நுழைகின்றார். அதற்கு பிறகு ஜூன் 15ஆம் தேதி அன்று சூரிய பகவான் மிதுன ராசியில் நுழைகின்றார். இவர்கள் இருவரும் மிதுன ராசியில் ஒன்றாக பயணிக்க போகின்றனர். சூரியன் மற்றும் புதன் சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பிடம் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை பெற்றுள்ளனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
ரிஷப ராசி
சூரியன் மற்றும் புதன் சேர்க்கை உங்களுக்கு பல்வேறு விதமான பலன்களை கொடுக்கப் போகின்றது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். நிறைவான வாழ்க்கை உங்களுக்கு கிடைக்கும். எதிரியாக முன்னேற்றம் உண்டாகும். செல்வத்தால் உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தில் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.
கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். மற்றவர்களிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும் பண வரவில் இந்த குறையும் இருக்காது.
மிதுன ராசி
சூரியன் மற்றும் புதன் சேர்க்கை உங்களுக்கு ஜூன் மாதத்திற்கு பிறகு உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கப் போகின்றது. அனைத்து கால கட்டமும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
நீண்ட கால நிதி சிக்கல்கள் உங்களை விட்டு விலகும். தடைப்பட்டு கிடந்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். சூரியன் ஆதிக்கத்தால் உங்களுக்கு மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். பேச்சு ஆற்றலால் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.
மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். அதனால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். தலைமைத்துவ திறன்கள் உங்களுக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும்.
சிம்ம ராசி
சூரியன் மற்றும் புதன் சேர்க்கை உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கப் போகின்றது. நிதி ரீதியாக உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். சூரியனின் தாக்கம் உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். புதன் பகவானால் உங்களுக்கு யோகம் உண்டாகும். பழைய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். புதிய முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். அதிர்ஷ்டத்தால் உங்களுக்கு ராஜ வாழ்க்கை கிடைப்பது உறுதி.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9