தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Mars And Guru: கூட்டணி பண மழை கொட்டும் செவ்வாய் குரு.. அதிர்ஷ்டத்தில் ஆட்டம் போடும் ராசிகள்.. இனி ஜாலிதான்

Mars and Guru: கூட்டணி பண மழை கொட்டும் செவ்வாய் குரு.. அதிர்ஷ்டத்தில் ஆட்டம் போடும் ராசிகள்.. இனி ஜாலிதான்

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 05, 2024 05:23 PM IST

Mars and Guru: ஜூன் மாதத்தில் செவ்வாய் பகவான் ரிஷப ராசியில் நுழைய உள்ளார். இதனால் குரு மற்றும் செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது. இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர்.

கூட்டணி பண மழை கொட்டும் செவ்வாய் குரு.. அதிர்ஷ்டத்தில் ஆட்டம் போடும் ராசிகள்.. இனி ஜாலிதான்
கூட்டணி பண மழை கொட்டும் செவ்வாய் குரு.. அதிர்ஷ்டத்தில் ஆட்டம் போடும் ராசிகள்.. இனி ஜாலிதான்

நவகிரகங்களில் மங்கள யோக கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இவர் தேவர்களின் ராஜகுருவாக திகழ்ந்த வருகின்றார் வருடத்திற்கு ஒருமுறை இடமாற்றக்கூடியவர். குரு பகவான் இவர் கடந்த மே மாதம் மூன்றாம் தேதி என்று ரிஷப ராசியில் புகுந்தார் இது சுக்கிர பகவான் சொந்தமான ராசியாகும்.

இந்நிலையில் ஜூன் மாதத்தில் செவ்வாய் பகவான் ரிஷப ராசியில் நுழைய உள்ளார். இதனால் குரு மற்றும் செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது. இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ரிஷப ராசி

உங்கள் ராசிகள் முதல் வீட்டில் குரு செவ்வாய் சேர்க்கை நிகழ்ந்துள்ளது இதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்க கூடும். செக்கு கடந்த பணம் உங்களை தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். திருமணமானவர்களின் வாழ்க்கையின் மகிழ்ச்சியாக இருக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை மற்றும் கௌரவம் அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வணிகத்தில் எதிர்பாராத அளவிற்கு பணம் வரவு இருக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சிம்ம ராசி

உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் குரு மற்றும் செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு மரியாதை அதிகரிக்கும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். 

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். பரம்பரை சொத்துக்களால் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். உறவினர்களால் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கடக ராசி

உங்கள் ராசியில் 11-வது வீட்டில் குரு மற்றும் செவ்வாய் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் உங்களுக்கு வருமானத்தில் நல்ல அதிகரிப்பு இருக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வணிகத்தில் புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். பழைய முதலீடுகளால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். காதல் வாழ்க்கையின் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகளால் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel