Mass Lucky Rasis: கோடீஸ்வரராக மாறும் ராசிகள்.. சுக்கிரன் பணத்தை அள்ளி வீசப் போகிறார்.. யோகம் யாருக்கு?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Mass Lucky Rasis: கோடீஸ்வரராக மாறும் ராசிகள்.. சுக்கிரன் பணத்தை அள்ளி வீசப் போகிறார்.. யோகம் யாருக்கு?

Mass Lucky Rasis: கோடீஸ்வரராக மாறும் ராசிகள்.. சுக்கிரன் பணத்தை அள்ளி வீசப் போகிறார்.. யோகம் யாருக்கு?

Suriyakumar Jayabalan HT Tamil
Published Jul 09, 2024 03:42 PM IST

Lord Venus: அசுரர்களின் தெய்வமாக விளங்கக்கூடிய சுக்கிரன் இந்த மாதத்தில் கடக ராசியில் நுழைகின்றார். இவருடைய கடக ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்க போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

கோடீஸ்வரராக மாறும் ராசிகள்.. சுக்கிரன் பணத்தை அள்ளி வீசப் போகிறார்.. யோகம் யாருக்கு?
கோடீஸ்வரராக மாறும் ராசிகள்.. சுக்கிரன் பணத்தை அள்ளி வீசப் போகிறார்.. யோகம் யாருக்கு?

இது போன்ற போட்டோக்கள்

ஒரு ராசியில் சுக்கிரன் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சுக்கிர பகவான் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். ஆடம்பர வாழ்க்கையை கொடுக்கக்கூடிய தெய்வமாக சுக்கிரன் விளங்கி வருகின்றார்.

அசுரர்களின் தெய்வமாக விளங்கக்கூடிய சுக்கிரன் இந்த மாதத்தில் கடக ராசியில் நுழைகின்றார். இவருடைய கடக ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்க போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

கடக ராசி

உங்கள் ராசியில் முதல் வீட்டில் சுக்கிரன் பயணம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு ஆளுமை திறன் அதிகரிக்கும். பணம் சம்பாதிக்க கூடிய புதிய வழிகள் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும்.

திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவு திருமணம் கைகூடும். கூட்டுத் தொழில் முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும். எதிர்பார்த்த அளவிற்கு உங்களுக்கு நல்ல லாபம் அனைத்து வாய்ப்புகளிலும் கிடைக்கும்.

துலாம் ராசி

உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். திட்டமிட்ட வேலைகள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். எடுத்துக் கொண்ட காரியங்கள் உங்களுக்கு புகழை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். புதிய வாய்ப்புகளால் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும்.

மிதுன ராசி

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்யப் போகின்றார். இதனால் எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். பணம் சம்பாதிக்க கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு அதிகமாக கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெற்றிகரமாக அனைத்து காரியங்களும் உங்களுக்கு முடிவடையும். 

பேச்சுத் திறமையால் காரியங்களும் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். அலுவலகத்தில் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வணிகத்தில் சிக்கிக் கொண்டவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9