தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Money Luck: விளையாட்டாக கொட்டும் பணம்.. சூரியனின் அதிர்ஷ்ட ராசிகள்.. உங்க ராசி இதில் இருக்க பாருங்கள்?

Money Luck: விளையாட்டாக கொட்டும் பணம்.. சூரியனின் அதிர்ஷ்ட ராசிகள்.. உங்க ராசி இதில் இருக்க பாருங்கள்?

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 13, 2024 05:29 PM IST

Lord Sun: சூரியன் மற்றும் புதன் இருவரும் நட்பு கிரகங்கள் என்கின்ற காரணத்தினால் இதனுடைய தாக்கம் கொஞ்சம் சிறப்பாக இருக்கும். இந்நிலையில் மிதுன ராசியில் பயணம் செய்யும் சூரிய பகவானால் ஒரு சில ராசிகள் சிறப்பான பலன்களை பெறப்போகின்றனர்.

விளையாட்டாக கொட்டும் பணம்.. சூரியனின் அதிர்ஷ்ட ராசிகள்.. உங்க ராசி இதில் இருக்க பாருங்கள்?
விளையாட்டாக கொட்டும் பணம்.. சூரியனின் அதிர்ஷ்ட ராசிகள்.. உங்க ராசி இதில் இருக்க பாருங்கள்?

நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர் இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சூரிய பகவான் சிம்ம ராசியில் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். சூரிய பகவான் ஒவ்வொரு முறை இடமாறும் பொழுதும் தமிழ் மாதம் பிறக்கின்றது.

நவகிரகங்களின் உச்ச அதிகாரம் கொண்ட சூரிய பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஜூன் மாதம் 15 ஆம் தேதி அன்று சூரிய பகவான் மிதுன ராசியில் நுழைந்தார். இது புதன் பகவானின் சொந்தமான ராசியாகும்.

சூரியன் மற்றும் புதன் இருவரும் நட்பு கிரகங்கள் என்கின்ற காரணத்தினால் இதனுடைய தாக்கம் கொஞ்சம் சிறப்பாக இருக்கும். இந்நிலையில் மிதுன ராசியில் பயணம் செய்யும் சூரிய பகவானால் ஒரு சில ராசிகள் சிறப்பான பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பளம் உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்களோடு உங்களுக்கு மகிழ்ச்சியான தருணங்கள் உருவாகும். சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். 

தன்னம்பிக்கை அதிகரிக்க கூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். இது நிலைமைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும். உறவினர்களால் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். 

மிதுன ராசி 

உங்கள் ராசியில் முதல் வீட்டில் சூரியன் பயணம் செய்த வருகின்றார். இதனால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். 

சிறப்பான பாராட்டுக்கள் உங்களுக்கு மற்றவர்களிடத்தில் கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவில் இருந்து குறையும். இருக்காது. நிதி நிலைமை பலமாக மாறும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

கன்னி ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் நீண்ட நாள் ஆசைகள் உங்களுக்கு நிறைவேறும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளிநாட்டில் பலருக்கு வேலை செய்ய வாய்ப்புகள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

அதிக வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். உறவினர்களுக்கு இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9