Lord Sani Cancer: சனி போட்டு புரட்டிப் புண்படுத்துவார்.. ரொம்ப கவனம் தேவை.. கடகத்தில் வக்கிர பெயர்ச்சி.. ரிஸ்க் வேண்டாம்
Lord Sani Cancer: சனிபகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சனி ஜூன் 30-ம் தேதி அன்று வக்கிர பெயர்ச்சி அடைய உள்ளார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கம் உண்டாகும்.
Lord Sani Cancer: நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். நன்மைகள் தீமைகள் என தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.
குறிப்பாக சனி பகவான் நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சனிபகவான் 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். சனிபகவான் தற்போது கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார் 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ராசிக்கு வந்துள்ளார்.
இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் இந்த 2024 ஆம் ஆண்டு சனிபகவானின் ஆண்டாக கருதப்படுகிறது. சனிபகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சனி ஜூன் 30-ம் தேதி அன்று வக்கிர பெயர்ச்சி அடைய உள்ளார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கம் உண்டாகும்.
நட்சத்திர மாற்றம்
தற்போது கும்ப ராசியில் சனிபகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் இருந்து வருகிறார். அது அந்த ராசியின் கடைசி நட்சத்திரமாகும். இதே நிலையில் பின்னோக்கி பயணம் செய்து சதய நட்சத்திரத்திற்கு செல்கிறார். இது சனி பகவானின் வக்கிர பெயர்ச்சி ஆகும் ஜூன் 30-ம் தேதி அன்று வக்கிர நிலை அடைகிறார். அக்டோபர் ஐந்தாம் தேதி அன்று பின்னோக்கி சென்ற வண்ணம் இருந்து அவிட்டம் நட்சத்திரத்தில் நுழைகின்றார்.
சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக் கூடியவர். ஒரு ராசியில் சனிபகவான் இருந்தால் அதன் தாக்கம் அந்த ராசிக்கு மட்டும் இருக்காது. அனைத்து ராசியான 12 ராசிகளுக்கும் சனி பகவானின் தாக்கம் கட்டாயம் இருக்கும். நல்ல பலன்கள் மற்றும் கெடு பலன்கள் உள்ளிட்டவைகள் கலவையாக கிடைக்கும்.
சனிபகவான் முன்னே சென்று பிறகு பெண்ணை சென்று அணைத்துவிட்ட பலன்களையும் கொடுக்கக் கூடியவர். ராசி மற்றும் நட்சத்திர ரீதியாக சனி பகவான் முண்ணும் பெண்ணுமாக நகர்ந்து செல்கிறார். அவர் பின்னோக்கி நகர்கின்ற பயணத்தையே வக்கிரப் பெயர்ச்சி என அழைக்கின்றனர்.
கடக ராசி
சனிபகவான் ஜூன் 30-ம் தேதி அன்று கடகத்தில் வக்கிர பெயர்ச்சி அடைகிறார் இது அந்த ராசிக்கு பல சிக்கல் ஆன பலன்களை கொடுக்கப் போகின்றது இது கடக ராசிக்கு மிகவும் கஷ்டமான காலமாக இருக்கும்.
தொழில் மற்றும் வணிகம்
நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படக்கூடும். இந்த சிக்கல்கள் ஒரு வருட காலம் உங்களைத் தேடி வரும். இந்த ஆண்டு உங்களுக்கு மிகவும் கஷ்டத்தை கொடுக்கக் கூடிய ஆண்டாக அமையும் செலவு அதிகரிக்கக்கூடும். சுப மற்றும் அசுப காரியங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
பணம் சம்பாதிக்கக்கூடிய சூழ்நிலைகள் தற்போது அமையாது எவ்வளவு பணம் வந்தாலும் உங்கள் கையில் நிற்காது. தூக்கத்தில் கூட உங்களுக்கு சிக்கல் ஏற்படக்கூடும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. பணத்தை கூடுமான அளவு சேமிக்க முயற்சி செய்வது நல்லது
தப்பிக்கும் வழி
தேவையில்லாத விஷயங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. எதிர் பாலின உறவுகளோடு பழகும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆசைகளை அடக்கிக் கொண்டு இருப்பது நல்லது. பெண்கள் சகவாசத்தை குறைத்துக் கொள்வது நல்லது.
தேவையில்லாத வாக்குறுதிகளை யாருக்கும் கொடுக்க வேண்டாம். வார்த்தைகளை விட்டுவிட்டால் மாட்டிக் கொள்வீர்கள். உங்களுடைய சிறிய வார்த்தையும் மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தக்கூடும். மற்றவர்கள் மனதை புண்படுத்தக் கூடும். எனவே யோசித்துப் பேசுவது நல்லது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9