Rahu Raja Rasis: ராகுவை நண்பனாக்கும் ராசிகள்.. தொட்டால் கொட்டும் பணமழை.. தோஸ்து படா தோஸ்து..
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rahu Raja Rasis: ராகுவை நண்பனாக்கும் ராசிகள்.. தொட்டால் கொட்டும் பணமழை.. தோஸ்து படா தோஸ்து..

Rahu Raja Rasis: ராகுவை நண்பனாக்கும் ராசிகள்.. தொட்டால் கொட்டும் பணமழை.. தோஸ்து படா தோஸ்து..

Suriyakumar Jayabalan HT Tamil
Published Jul 28, 2024 10:02 AM IST

Rahu Raja Rasis: ராகு பகவான் தற்போது சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்துள்ளார். சுமார் எட்டு மாதங்கள் ராகு பகவானின் நட்சத்திர பலன்களை அனைத்து ராசிகளும் பெற்றாலும் குறிப்பிட்டு சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர்.

ராகுவை நண்பனாக்கும் ராசிகள்.. தொட்டால் கொட்டும் பணமழை.. தோஸ்து படா தோஸ்து..
ராகுவை நண்பனாக்கும் ராசிகள்.. தொட்டால் கொட்டும் பணமழை.. தோஸ்து படா தோஸ்து..

இது போன்ற போட்டோக்கள்

கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராக்கு பகவான் மீன ராசியில் நுழைந்தார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். ராஜபகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் ராகு பகவான் தற்போது சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்துள்ளார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு மார்ச் எட்டாம் தேதி அன்று வரை இந்த நட்சத்திரத்தில் ராகு பகவான் பயணம் செய்வார். சுமார் எட்டு மாதங்கள் ராகு பகவானின் நட்சத்திர பலன்களை அனைத்து ராசிகளும் பெற்றாலும் குறிப்பிட்டு சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காண்போம்.

துலாம் ராசி

நிழல் கிரகமாக விளங்கக்கூடிய ராகு பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சாதகமான மாற்றங்களை கொடுத்து உள்ளது. இதனால் உங்களுக்கு வாழ்க்கையில் நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கப் போகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

வெளியூர் பயணங்கள் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கையில் அமைதி நிலவும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

மகர ராசி

ராகு பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சாதகமான பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. இவருடைய நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு மிகவும் நன்மைகளை கொடுக்கப் போகின்றது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

எதிர்பாராத நேரத்தில் நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். 8 மாதங்கள் உங்களுக்கு பணம் மழை கொட்டும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்க போகின்றது.

கும்ப ராசி

ராகு பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு யோகத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அதிக செலவுகள் ஏற்பட்டாலும் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். பணத்தை சேமிக்க கூடிய சூழ்நிலைகள் உங்களுக்கு அதிகமாக இருக்கும். நேர்மறையான மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையில் நடக்கப் போகின்றது. 

அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்கள் வாழ்க்கையில் கிடைக்கப் போகின்றது. நிதி ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். பல முக்கியமான மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையில் நிகழும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9