Lord Rahu Attack: கஷ்டத்தில் சிக்கிய ராசிகள்.. புரட்டி எடுக்க போகும் ராகு.. தலை தெறிக்க ஓடப்போகும் ராசிகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Rahu Attack: கஷ்டத்தில் சிக்கிய ராசிகள்.. புரட்டி எடுக்க போகும் ராகு.. தலை தெறிக்க ஓடப்போகும் ராசிகள்

Lord Rahu Attack: கஷ்டத்தில் சிக்கிய ராசிகள்.. புரட்டி எடுக்க போகும் ராகு.. தலை தெறிக்க ஓடப்போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
May 31, 2024 01:55 PM IST

Lord Rahu: ராகு பகவானின் மீன ராசி பயணமானது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு சிக்கலான சூழ்நிலை உருவாகப் போகின்றது. வரும் டிசம்பர் மாதம் வரை அவர்கள் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை அமைந்துள்ளது.

கஷ்டத்தில் சிக்கிய ராசிகள்.. புரட்டி எடுக்க போகும் ராகு.. தலை தெறிக்க ஓடப்போகும் ராசிகள்
கஷ்டத்தில் சிக்கிய ராசிகள்.. புரட்டி எடுக்க போகும் ராகு.. தலை தெறிக்க ஓடப்போகும் ராசிகள்

சனிபகவானுக்கு பிறகு அனைவரும் அச்சப்படக்கூடிய கிரகமாக ராகுபகவான் விளங்கி வருகின்றார். கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியில் நுழைந்தார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

ராகு பகவானின் மீன ராசி பயணமானது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு சிக்கலான சூழ்நிலை உருவாகப் போகின்றது. வரும் டிசம்பர் மாதம் வரை அவர்கள் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை அமைந்துள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

கன்னி ராசி

உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் நீங்கள் டிசம்பர் மாதம் வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும். தொழிலில் பெரிய முன்னேற்றம் இருக்காது. காதல் வாழ்க்கையில் சண்டை சச்சரவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. 

குடும்பத்தினரிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காதல் வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படும். கூடும் திருமண வாழ்க்கையில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உறவினர்களோடு மன கசப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. நண்பர்களால் உங்களுக்கு சிக்கல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

தனுசு ராசி

உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. ஆடம்பரப் பொருட்களின் மீது கவனத்தை குறைத்துக் கொள்வது நல்லது. வாழ்க்கை மிகவும் மன உளைச்சலாக இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. 

டிசம்பர் மாதம் வரை மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்களுக்கு அதிக சிக்கல்கள் குடும்ப வாழ்க்கையில் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மற்றவர்களிடம் பேசுவது என்னவென்று தெரிந்து கொண்டு பேசுவது நல்லது.

கும்ப ராசி

உங்கள் ராசியில் இரண்டாவது பெட்டில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை செலவுகள் மற்றும் சிக்கல்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மற்றவர்களிடம் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். செலவுகள் செய்வதனால் உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதற்காக வாய்ப்புகள் உள்ளது. 

பணவரவில் அந்த அளவிற்கு முன்னேற்றம் இருக்காது. நிதி நிலைமையில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களிடமிருந்து கிடைக்கக்கூடிய பலன்கள் கிடைப்பதற்கு சற்று தாமதமாகும். அனுபவசாலிகளிடம் ஆலோசனை கேட்டு உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றக் கொள்வது நல்லது. பெரிய நிதி இழப்பை நீங்கள் சந்திப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

Whats_app_banner