தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Mercury: புதன் விளையாட்டு ஆரம்பம்.. பணத்தில் நனையும் ராசிகள். அதிர்ஷ்டம் தேடி வருகுது

Lord Mercury: புதன் விளையாட்டு ஆரம்பம்.. பணத்தில் நனையும் ராசிகள். அதிர்ஷ்டம் தேடி வருகுது

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 05, 2024 10:48 AM IST

Lord Mercury:

புதன் விளையாட்டு ஆரம்பம்.. பணத்தில் நனையும் ராசிகள். அதிர்ஷ்டம் தேடி வருகுது
புதன் விளையாட்டு ஆரம்பம்.. பணத்தில் நனையும் ராசிகள். அதிர்ஷ்டம் தேடி வருகுது

புதன் பகவான் ஒரு ராசியில் நல்ல நிலைமையில் இருந்தால் அவர்களுக்கு பேச்சு மற்றும் புத்திசாலித்தனத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இந்நிலையில் கடந்த மே மாதம் 31ம் தேதி அன்று தனது நண்பனின் ராசியான ரிஷப ராசியில் புகுந்தார்.

சுக்கிரன் மற்றும் புதன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்த வருகின்றனர். புதன் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் ரிஷப ராசி பயணத்தால் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மகர ராசி

புதன் பகவான் உங்கள் ராசிகள் ஐந்தாவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். குழந்தை தொடர்பான சில விஷயங்களில் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். ஊடகத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். 

நிதி நிலைமையில் நல்ல முயற்சி இருக்கும் எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கும்ப ராசி

உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். சில பொருட்களால் உங்களுக்கு இன்பங்கள் அதிகரிக்கும். தொழில் தொடர்பான முக்கியமான முடிவுகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கக்கூடும். புதிய ஆர்டர்கள் உங்களை தேடி வரும். 

புதிய முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பெற்றோர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைந்திருக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கக்கூடும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வசதி மற்றும் வாய்ப்புகள் உங்களுக்கு குறைவில்லாமல் கிடைக்கும். 

வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். பல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பேச்சு திறமையால் காரியங்கள் வெற்றி அடையும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு ஒரு திருமணம் கைகூடும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel