வீட்டை பூட்டு போடும் புதன்.. மாடி வீடு செல்லும் ராசிகள்.. யாருக்கு யோகம் கிடைக்கப் போகுது!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  வீட்டை பூட்டு போடும் புதன்.. மாடி வீடு செல்லும் ராசிகள்.. யாருக்கு யோகம் கிடைக்கப் போகுது!

வீட்டை பூட்டு போடும் புதன்.. மாடி வீடு செல்லும் ராசிகள்.. யாருக்கு யோகம் கிடைக்கப் போகுது!

Suriyakumar Jayabalan HT Tamil
Oct 22, 2024 01:44 PM IST

Lord Mercury: புதன் பகவானின் உதயம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பிடம் ஒரு சில ராசிகள் இதன் மூலம் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

வீட்டை பூட்டு போடும் புதன்.. மாடி வீடு செல்லும் ராசிகள்.. யாருக்கு யோகம் கிடைக்கப் போகுது!
வீட்டை பூட்டு போடும் புதன்.. மாடி வீடு செல்லும் ராசிகள்.. யாருக்கு யோகம் கிடைக்கப் போகுது!

அந்த வகையில் புதன் பகவான் வருகின்ற அக்டோபர் 22ஆம் தேதி அன்று துலாம் ராசியில் உதயமாகின்றார். புதன் பகவானின் உதயம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பிடம் ஒரு சில ராசிகள் இதன் மூலம் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மிதுன ராசி

புதன் பகவானின் உதயம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் அமைதி அதிகரிக்கும். அனைத்து முயற்சிகளும் உங்களுக்கு ஏற்றவாறு நடக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். சக ஊழியர்களால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். 

நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான சூழ்நிலைகள் அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களால் முன்னேற்றம் உண்டாகும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.

கன்னி ராசி

புதன் பகவானின் உதயம் உங்களுக்கு மகிழ்ச்சியை அதிகப்படுத்தி கொடுக்கப் போகின்றது. குடும்ப பொறுப்புகளில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். உங்களுக்கு பாராட்டுகளை கொடுப்பார்கள். அனைத்து தேவைகளும் உங்களுக்கு பூர்த்தி அடையும். வேலை செய்யும் இடத்தில் நீங்கள் எதிர்பார்த்தவாறு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

பணி நிமித்தமாக நீங்கள் வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. புதிய தொழில் தொடங்க நினைத்தால் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். மன அழுத்தம் குறையும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.

துலாம் ராசி

புதன் பகவானின் உதயம் உங்களுக்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. பணி நிமித்தமாக நீங்கள் வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக இருக்கும். அதிக பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். பணத்தை சேமிப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். 

வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். திருமண வாழ்வு உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். வாழ்க்கைத் துணைக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்