தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Guru: ராஜாவாகப் போகும் ராசிகள்.. ஒரு வருட பணமழை.. குரு கொட்டுகிறார்.. அதிர்ஷ்ட ராசிகள் யார்?

Lord Guru: ராஜாவாகப் போகும் ராசிகள்.. ஒரு வருட பணமழை.. குரு கொட்டுகிறார்.. அதிர்ஷ்ட ராசிகள் யார்?

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 16, 2024 12:43 PM IST

Lord Guru Bhagwan: ரிஷப ராசிக்கு இடம் மாறிய அடுத்த இரண்டு நாட்களில் அதே ராசியில் அஸ்தமனமானார். தற்போது இந்த மாத தொடக்கத்தில் குரு பகவான் உதயமானார். குரு பகவானின் உதயத்தால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ராஜாவாகப் போகும் ராசிகள்.. ஒரு வருட பணமழை.. குரு கொட்டுகிறார்.. அதிர்ஷ்ட ராசிகள் யார்?
ராஜாவாகப் போகும் ராசிகள்.. ஒரு வருட பணமழை.. குரு கொட்டுகிறார்.. அதிர்ஷ்ட ராசிகள் யார்?

குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நவகிரகங்களில் மிக முக்கிய கிரகமாக குரு பகவான் விளங்கி வருகின்றார். கடந்த மே ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு சென்றார். ஒரு வருடத்திற்கு பிறகு இந்த ராசியில் பயணம் செய்து வருகிறார்

தற்போது ரிஷப ராசிக்கு இடம் மாறிய அடுத்த இரண்டு நாட்களில் அதே ராசியில் அஸ்தமனமானார். தற்போது இந்த மாத தொடக்கத்தில் குரு பகவான் உதயமானார். குரு பகவானின் உதயத்தால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

விருச்சிக ராசி

உங்கள் ராசிகள் ஏழாவது வெற்றி குரு பகவான் உதயமாகியுள்ளார். இதனால் உங்களுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். காதல் வாழ்க்கை முன்பை விட சிறப்பாக இருக்கும். மாணவர்கள் நல்ல முன்னேற்றத்தை பெறுவார்கள். கூட்டு தொழில் நிகழ்ச்சிகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். 

திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். உயர் கல்வி படிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். எது நிலைமைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பானதாக அமையும்.

கன்னி ராசி

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் குருபகவான் உதயமானார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் முழுமையாக கிடைக்கின்றது. தந்தையின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். 

தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கக்கூடும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்களின் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

மகர ராசி

உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் குருபகவான் உதயம் ஆக்கி உள்ளார். இதனால் உங்களுக்கு நல்ல செய்திகள் தேடி வரும். குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். மாணவர்கள் முன்பை விட கல்வியின் சிறப்பாக செயல்படுவார்கள். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். 

எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயம் இருக்கும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உறவினர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9