தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குரு பிளந்து கொட்டுவார்.. செவ்வாய் அள்ளி வீசுவார்.. பணத்தில் மூழ்கும் ராசிகள்.. கூரைய பிச்சிக்கிட்டு கொட்டும்.

குரு பிளந்து கொட்டுவார்.. செவ்வாய் அள்ளி வீசுவார்.. பணத்தில் மூழ்கும் ராசிகள்.. கூரைய பிச்சிக்கிட்டு கொட்டும்.

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 27, 2024 05:51 PM IST

Royal life: ஜூலை மாதத்தில் தளபதியான செவ்வாய் ரிஷப ராசிக்குள் நுழைகிறார். இதனால் குரு மற்றும் செவ்வாய் இவர்கள் இருவரும் 12 ஆண்டுகளுக்கு பிறகு ரிஷப ராசியில் சேரப்போகின்றனர். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்க போகின்றது.

குரு பிளந்து கொட்டுவார்.. செவ்வாய் அள்ளி வீசுவார்.. பணத்தில் மூழ்கும் ராசிகள்.. கூரைய பிச்சிக்கிட்டு கொட்டும்.
குரு பிளந்து கொட்டுவார்.. செவ்வாய் அள்ளி வீசுவார்.. பணத்தில் மூழ்கும் ராசிகள்.. கூரைய பிச்சிக்கிட்டு கொட்டும்.

Royal life: நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குரு பகவான். இவர் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குருபகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் மாறினார். இந்த ஆண்டு மிகப்பெரிய கிரகத்தின் இடமாற்றமாக குரு பகவானின் இடமாற்றம் அமைந்தது.

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, வீரம், தைரியம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

அந்த வகையில் ரிஷப ராசியில் ஏற்கனவே குரு பகவான் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற ஜூலை மாதத்தில் தளபதியான செவ்வாய் ரிஷப ராசிக்குள் நுழைகிறார். இதனால் குரு மற்றும் செவ்வாய் இவர்கள் இருவரும் 12 ஆண்டுகளுக்கு பிறகு ரிஷப ராசியில் சேரப்போகின்றனர். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்க போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் குரு மற்றும் செவ்வாய் சேர்க்கை நிகழ உள்ளது. இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் இருக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதையை அதிகரிக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கடக ராசி

உங்கள் ராசியில் 11-வது வீட்டில் குருபகவான் மற்றும் செவ்வாய் பகவான் இவர்கள் இருவரும் ஒன்று சேருகின்றனர். இதனால் உங்களுக்கு பெரிய அளவில் முன்னேற்றம் இருக்கக்கூடும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.

சிம்ம ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் குரு மற்றும் செவ்வாய் இவர்கள் இருவரும் சேர்கின்றனர். இதனால் உங்களுக்கு தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்பார்கள். விரும்பிய இடமாற்றம் உங்களுக்கு கிடைக்கும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். ராணுவத் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9