தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Mercury: பண மூட்டையில் குதிக்கும் ராசிகள்.. புதன் கொட்டப் போகிறார்.. அதிர்ஷ்டக்கார ராசிகள் யார்?

Lord Mercury: பண மூட்டையில் குதிக்கும் ராசிகள்.. புதன் கொட்டப் போகிறார்.. அதிர்ஷ்டக்கார ராசிகள் யார்?

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 06, 2024 05:52 PM IST

Lord Mercury: சுக்கிரன் மற்றும் புதன் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். புதன் பகவானின் ரிஷப ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பிடம் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்க போகின்றனர்.

பண மூட்டையில் குதிக்கும் ராசிகள்.. புதன் கொட்டப் போகிறார்.. அதிர்ஷ்டக்கார ராசிகள் யார்?
பண மூட்டையில் குதிக்கும் ராசிகள்.. புதன் கொட்டப் போகிறார்.. அதிர்ஷ்டக்கார ராசிகள் யார்?

இவர் ஒவ்வொரு முறை ராசி மாற்றம் செய்யும் பொழுது அதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். புதன் பகவான் மீன ராசியில் பயணம் செய்து வந்தார். கடந்த மே மாதம் பத்தாம் தேதி அன்று மேஷ ராசியில் நுழைந்தார். அதற்குப் பிறகு மே மாதம் 31ஆம் தேதி அன்று ரிஷப ராசியில் நுழைந்தார். 

இது சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும். சுக்கிரன் மற்றும் புதன் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். புதன் பகவானின் ரிஷப ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பிடம் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

ரிஷப ராசி

உங்கள் ராசிகள் முதல் வீட்டில் புதன் பகவான் பயணம் செய்கின்றார். இதனால் உங்களுக்கு ஆளுமை திறன் அதிகரிக்கும். எடுக்க முடிவுகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். எடுத்துக்கொண்ட காரியங்களில் அனைத்தும் வெற்றி கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமண மானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். கூட்டு தொழில் முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. 

மிதுன ராசி 

உங்கள் ராசியில் 12-வது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். அனைத்து வேலைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கையில் வருமானம் உங்களுக்கு அதிகரிக்கக்கூடும். வேலை தொடர்பான பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும். குடும்பத்தின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

கடக ராசி 

உங்கள் ராசியில் 11-வது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வு கிடைக்கும். நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். நல்ல முதலீடுகள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். வருமானத்திற்கான ஆதரவு உங்களுக்கு கிடைத்துக் கொண்டே இருக்கும். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். மனதில் தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கப்படும். பேச்சுத் திறமையால் அனைத்து காரியங்களும் உங்களுக்கு சாதகமாக முடிவடையும்..

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel