தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Viparita Raja Yoga: கொட்டிக் கொடுக்கும் குரு.. பணத்தில் விளையாடும் ராசிகள்.. இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாது

Viparita Raja Yoga: கொட்டிக் கொடுக்கும் குரு.. பணத்தில் விளையாடும் ராசிகள்.. இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாது

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 02, 2024 12:41 PM IST

Viparita Raja Yoga: தேவர்கள் குருவாக விளங்கக்கூடிய குருபகவான் கடந்த மே ஒன்றாம் தேதியன்று ரிஷப ராசிக்கு சென்றார் ரிஷப ராசி சுக்கிர பகவான் சொந்தமான ராசி ஆகும். ரிஷப ராசியில் நுழைந்துள்ள காரணத்தினால் விபரீத ராஜயோகம் உருவாகியுள்ளது.

கொட்டிக் கொடுக்கும் குரு.. பணத்தில் விளையாடும் ராசிகள்.. இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாது
கொட்டிக் கொடுக்கும் குரு.. பணத்தில் விளையாடும் ராசிகள்.. இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாது

குரு பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர். ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அந்த வகையில் தேவர்கள் குருவாக விளங்கக்கூடிய குருபகவான் கடந்த மே ஒன்றாம் தேதியன்று ரிஷப ராசிக்கு சென்றார் ரிஷப ராசி சுக்கிர பகவான் சொந்தமான ராசி ஆகும். ரிஷப ராசியில் நுழைந்துள்ள காரணத்தினால் விபரீத ராஜயோகம் உருவாகியுள்ளது. 

இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதனால் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் பெற போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

துலாம் ராசி

உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் குருபகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு விபரீத ராஜயோகம் உருவாக்கியுள்ளது. எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆடம்பர வாழ்க்கை உங்களைத் தேடி வரும். வருமானத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

தொழில் ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்களில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும்.

தனுசு ராசி

உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் குருபகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு இந்த ஒரு ஆண்டு முழுவதும் எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். பங்குச்சந்தை உங்களுக்கு சாதகமாக இருக்கும். பணத்தில் முதலீடு செய்தால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். 

எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். தொழிலில் இரட்டிப்பான லாபங்கள் கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும்.

கடக ராசி

உங்கள் ராசியில் 11 வது வீட்டில் குருபகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும். விபரீத ராஜயோகத்தால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். பொதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். நிதி நிலைமையில் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். பணக்காரராக மாறக்கூடிய யோகம் உங்களுக்கு கிடைக்கக்கூடிய சூழ்நிலைகள் அமையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel