தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Guru: 12 ஆண்டுகளுக்குப் பிறகு.. குரு விளையாட்டு ஆரம்பம்.. பணத்தில் நனையும் ராசிகள்.. யோகம் வந்துவிட்டது

Lord Guru: 12 ஆண்டுகளுக்குப் பிறகு.. குரு விளையாட்டு ஆரம்பம்.. பணத்தில் நனையும் ராசிகள்.. யோகம் வந்துவிட்டது

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 11, 2024 05:50 PM IST

Guru Bhagavan: குரு பகவானின் இடமாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை உண்டாக்கும். 12 ஆண்டுகளுக்கு பிறகு குருபகவான் இந்த ராசியில் பயணம் செய்து வருகின்றார். இதனால் அதிர்ஷ்டத்தை பெரும் ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

12 ஆண்டுகளுக்குப் பிறகு.. குரு விளையாட்டு ஆரம்பம்.. பணத்தில் நனையும் ராசிகள்.. யோகம் வந்துவிட்டது
12 ஆண்டுகளுக்குப் பிறகு.. குரு விளையாட்டு ஆரம்பம்.. பணத்தில் நனையும் ராசிகள்.. யோகம் வந்துவிட்டது

குரு பகவான் கடந்த மே மாதம் மூன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு சென்றார். இது சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும். குரு பகவானின் இடமாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை உண்டாக்கும். 12 ஆண்டுகளுக்கு பிறகு குருபகவான் இந்த ராசியில் பயணம் செய்து வருகின்றார். இதனால் அதிர்ஷ்டத்தை பெரும் ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

கும்ப ராசி

உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பணம் உங்களை தேடி வரும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் அனைத்தும் குறையும். 

ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் நீங்கள் சற்று கவனமாக இருந்தால் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். உங்களுக்கு வாழ்க்கைத் துணையால் யோகம் கிடைக்கும்.

மகர ராசி

உங்கள் ராசிகள் ஐந்தாவது வீட்டில் குருபகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் நீங்கள் நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களை தேடிவரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். 

புதிதாக வேலை கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. திருமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கக்கூடும்.

ரிஷப ராசி

உங்கள் ராசியில் முதல் வீட்டில் குருபகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். 

தாம்பத்திய வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகளால் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை அள்ளிக் கொடுப்பார்கள். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel