தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Guru 2024: பணத்தால் மூழ்கடிக்க போகும் குரு.. கண்ணீரில் கதறும் ராசிகள்.. அதிர்ஷ்டத்தில் மிதப்பது நீங்கள் தான்

Lord Guru 2024: பணத்தால் மூழ்கடிக்க போகும் குரு.. கண்ணீரில் கதறும் ராசிகள்.. அதிர்ஷ்டத்தில் மிதப்பது நீங்கள் தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 16, 2024 05:24 PM IST

Lord Guru 2024: குரு பகவான் ஜூன் 13ஆம் தேதி அன்று ரோகிணி நட்சத்திரத்தில் நுழைந்தார். இவருடைய நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜ வாழ்க்கையை பெற்று தருகிறது.

பணத்தால் மூழ்கடிக்க போகும் குரு.. கண்ணீரில் கதறும் ராசிகள்.. அதிர்ஷ்டத்தில் மிதப்பது நீங்கள் தான்
பணத்தால் மூழ்கடிக்க போகும் குரு.. கண்ணீரில் கதறும் ராசிகள்.. அதிர்ஷ்டத்தில் மிதப்பது நீங்கள் தான்

Lord Guru 2024: நவகிரகங்களில் மங்கள் நாயகனாக விளங்க கூடியவர் குரு பகவான். இவர் தேவர்களின் ராஜகுருவாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். குரு பகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு வந்தார். ரிஷப ராசி சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும் இந்த ஆண்டு மிகப்பெரிய கிரகங்களின் மாற்றமாக குரு பகவானின் இடமாற்றம் நிகழ்ந்துள்ளது.