குரு சரவெடி.. சுக்கிரன் அணுகுண்டு.. கோடி கோடியாய் பணத்தை வாரும் ராசிகள்.. இனி பணம் கொட்டும்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குரு சரவெடி.. சுக்கிரன் அணுகுண்டு.. கோடி கோடியாய் பணத்தை வாரும் ராசிகள்.. இனி பணம் கொட்டும்

குரு சரவெடி.. சுக்கிரன் அணுகுண்டு.. கோடி கோடியாய் பணத்தை வாரும் ராசிகள்.. இனி பணம் கொட்டும்

Suriyakumar Jayabalan HT Tamil
Updated Oct 17, 2024 04:56 PM IST

Guru and Venus: குரு மற்றும் சுக்கிரன் ராஜ யோகத்தை உருவாக்கியுள்ளனர். இதன் தாக்கம் கட்டாயம் 12 ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றத்தை காணப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

குரு சரவெடி.. சுக்கிரன் அணுகுண்டு.. கோடி கோடியாய் பணத்தை வாரும் ராசிகள்.. இனி பணம் கொட்டும்
குரு சரவெடி.. சுக்கிரன் அணுகுண்டு.. கோடி கோடியாய் பணத்தை வாரும் ராசிகள்.. இனி பணம் கொட்டும்

இது போன்ற போட்டோக்கள்

அசுரர்களின் குருவாக திகழ்ந்து வரக்கூடியவர் சுக்கிரன். இவர் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சுக்கிரன் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் அக்டோபர் 10ஆம் தேதி அன்று குரு பகவான் மேஷ ராசியில் வளைவு கோணத்தில் தனது இயக்கத்தை தொடங்கினார். அக்டோபர் 13ம் தேதி அன்று சுக்கிரன் விருச்சிக ராசியில் தனது பயணத்தை தொடங்கினார். குரு மற்றும் சுக்கிரன் 2 கிரகங்களும் சேர்ந்து ஏழாவது வீட்டில் பயணம் செய்கின்றனர்.

அதன் காரணமாக குரு மற்றும் சுக்கிரன் ராஜ யோகத்தை உருவாக்கியுள்ளனர். இதன் தாக்கம் கட்டாயம் 12 ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றத்தை காணப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

குரு மற்றும் சுக்கிரன் சேர்ந்து உங்களுக்கு ராஜயோகத்தை கொடுத்துள்ளனர். உங்களுக்கு பல்வேறு விதமான சுப பலன்கள் கிடைக்கக்கூடும். வாழ்க்கையில் அனைத்து துறைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். நிதி நன்மைகள் உங்களுக்கு கிடைக்கக்கூடும். குடும்பத்தின் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். வேலையில் புதிய பொறுப்புகள் உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்று தரும். வியாபாரத்தில் நிதி ஆதாயங்கள் அதிகமாகும். தொழிலில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வணிகத்தில் எதிரிகளால் உங்களுக்கு தொந்தரவு ஏற்பட்டால் அது நிவர்த்தி அடையும். பல்வேறு விதமான இன்பங்கள் உங்களுக்கு கிடைக்கும்.

சிம்ம ராசி

குரு மற்றும் சுக்கிரன் சேர்ந்து உங்களுக்கு நல்ல பலன்களை அளிக்க போகின்றனர். அதிக பொருள் மற்றும் இன்பங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். உள்ளது குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் அமைதி நிலவும். திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களை தேடி வரும். 

பல்வேறு விதமான புதிய விஷயங்கள் உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்று தரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உங்களுக்கு கிடைக்கும். தொழிலில் உங்களுக்கு பயணங்கள் நல்ல பலன்களை பெற்றுத் தரும். வாழ்க்கையில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.

கன்னி ராசி

குரு மற்றும் சுக்கிரன் சேர்ந்து உங்களுக்கு சுப பலன்களை கொடுக்கப் போகின்றனர். உங்கள் வாழ்க்கையில் மிகுந்த மகிழ்ச்சி அனுபவிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். அனைத்து வேலைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். குழந்தைகளால் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். 

பெற்றோர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். ஒட்டுமொத்த காரியங்களும் உங்களுக்கு ஏற்றவாறு நடக்கும். சேமிப்பு செயல்பாடு அதிகமாகும். உடல்நிலை உங்களுக்கு ஏற்றவாறு திருப்திகரமாக இருக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.