தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru 2024: குரு பண மூட்டையில் பாய்ந்த சுக்கிரன்..அதிர்ஷ்டத்தில் விளையாட்டில் புகுந்த ராசிகள்.. உங்கள் ராசி இதில் இருக்கா

Guru 2024: குரு பண மூட்டையில் பாய்ந்த சுக்கிரன்..அதிர்ஷ்டத்தில் விளையாட்டில் புகுந்த ராசிகள்.. உங்கள் ராசி இதில் இருக்கா

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 03, 2024 05:04 PM IST

Guru and Venus: ரிஷப ராசியில் பயணம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த மே 19ஆம் தேதி அன்று சுக்கிரன் தனது சொந்தமான ராசியான ரிஷப ராசியில் புகுந்தார். தற்போது குரு மற்றும் சுக்கிரன் இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். இதனால் திரிகோண ராஜயோகம் உருவாகியுள்ளது.

குரு பண மூட்டையில் பாய்ந்த சுக்கிரன்.. அதிர்ஷ்டத்தில் விளையாட்டில் புகுந்த ராசிகள்.. உங்கள் ராசி இதில் இருக்கா
குரு பண மூட்டையில் பாய்ந்த சுக்கிரன்.. அதிர்ஷ்டத்தில் விளையாட்டில் புகுந்த ராசிகள்.. உங்கள் ராசி இதில் இருக்கா

ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடிய சுக்கிர பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களையும் கொடுக்கக்கூடியவர் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சுக்கிர பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

குருபகவான் தற்போது ரிஷப ராசியில் பயணம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த மே 19ஆம் தேதி அன்று சுக்கிரன் தனது சொந்தமான ராசியான ரிஷப ராசியில் புகுந்தார். தற்போது குரு மற்றும் சுக்கிரன் இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். இதனால் திரிகோண ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

விருச்சிக ராசி

திரிகோண ராஜ யோகம் உங்களுக்கு மிகவும் நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வாழ்க்கை துணையை நீங்கள் சந்திப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

பல்வேறு துறைகளில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சிறப்பான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்க இருப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உருவாக்கும்.

கடக ராசி

உங்கள் ராசிக்கு திரிகோண ராஜயோகம் சிறப்பான பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. பண சிக்கல்கள் உங்களுக்கு ஏற்படாமல் இருக்கும். கடன் தொல்லைகளால் நீங்கள் அவதிப்பட்டு இருந்தால் அது விரைவில் முடிந்துவிடும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத நேரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். 

வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். எடுத்த வேலைகள் அனைத்தும் உங்களுக்கு ஜாதகமாக முடிவடையும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.

சிம்ம ராசி

திரிகோண ராஜ யோகம் உங்களுக்கு வெற்றிகளை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. புதிய வேலைகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். 

உயர் அலுவலர்களிடம் நீங்கள் பாராட்டுகள் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வாய்ப்புகளால் உங்களுக்கு பணவரவு அதிகரிக்கும். திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கக்கூடும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். உறவினர்களால் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். நண்பர்களோடு செலவிட கூடிய நேரம் அதிகமாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel