தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See About The Zodiac Signs That Get Yoga From Lord Saturn

Sani Luck: சனி உதயமாக போகின்றார்.. அதிர்ஷ்டக்கார ராசிகள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 25, 2024 12:39 PM IST

சனிபகவானால் யோகத்தை பெறுகின்ற ராசிக்காரர்கள் குறித்து இங்கு காண்போம்.

சனிப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

கடின உழைப்புக்கு நல்ல பலன்களை கொடுப்பதுதான் இவருடைய வேலை. சனி பகவான் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு இடத்தை மாற்றுகிறார்.

சனி பகவான் நவக்கிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இவர் 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். சனி பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் வரும் மார்ச் 18 ஆம் தேதி அன்று கும்ப ராசியில் உதயமாக உள்ளார். இது மிகவும் முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

சனி பகவானின் உதயம் உங்களுக்கு மிகப்பெரிய மாற்றத்தை கொடுக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். நல்ல பலன்கள் இந்த காலகட்டத்தில் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

ரிஷப ராசி

 

சனி பகவானால் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பளம் உயர்வு கிடைக்கக்கூடும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

சிம்ம ராசி

 

சனி பகவானின் உதயம் உங்களுக்கு மிகப்பெரிய பரிசாக அமைந்துள்ளது. இந்த நாட்கள் உங்களுக்கு தடைபட்டு கிடந்த வேலைகள் அனைத்தும் முடிவடையும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களை தேடி வரும். திருமண காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். குழந்தைகள் மூலம் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவில் இருந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

துலாம் ராசி

 

உங்களுக்கு சுப பலன்களை சனி பகவானின் உதயம் கொடுக்கப் போகின்றது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். மாணவர்கள் போட்டு தேர்வில் முன்னேற்றம் அடைவார்கள். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel