Mercury Venus: ராஜராஜ ராசிகள் இவர்கள்தான்.. பணத்தைக் கொட்டும் புதன் சுக்கிரன்.. அரண்மனை வாழ்க்கை யாருக்கு?
Mercury Venus: புதன் பகவான் வருகின்ற ஜூன் 23ஆம் தேதி அன்று மிதுன ராசியில் உதயமாக உள்ளார். அதனை தொடர்ந்து ஜூன் மாதம் 28ஆம் தேதி அன்று சுக்கிர பகவான் உதயம் ஆகி உள்ளார். இந்த இரண்டு கிரகங்களும் உதயமாற்றின காரணத்தினால் அதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும்.
Mercury Venus: ஆடம்பரத்தின் நாயகன் நவகிரகங்களில் விளங்கக்கூடியவர். சுக்கிரன். இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இளவரசன் பதவியை வகிக்கக்கூடியவர். புதன் பகவான் இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் கல்வி, நரம்பு, வியாபாரம், புத்திசாலித்தனம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இவர் 27 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில்புதன் பகவான் வருகின்ற ஜூன் 23ஆம் தேதி அன்று மிதுன ராசியில் உதயமாக உள்ளார். அதனை தொடர்ந்து ஜூன் மாதம் 28ஆம் தேதி அன்று சுக்கிர பகவான் உதயம் ஆகி உள்ளார். இந்த இரண்டு கிரகங்களும் உதயமாற்றின காரணத்தினால் அதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் புதன் மற்றும் சுக்கிரன் இவர்களுடைய உதயத்தால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தில் மிதக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மிதுன ராசி
உங்கள் ராசியில் புதன் சித்திர உதயம் சிறப்பான பலன்களை பெற்றுத் தரப் போகின்றது. உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்க கூடும். பேச்சு திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். எடுத்துக்கொண்ட காரியங்கள் இனிமையாக முடிவடையும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியில் குதிக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். கூட்டு வணிகம் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும்.
ரிஷப ராசி
உங்கள் ராசியில் புதன் மற்றும் சுக்கிரன் உதயம் பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. பேச்சுத் திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். குறிப்பாக எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். எந்த வேலையை எடுத்தாலும் உங்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். ஆளுமை திறன் மற்றும் அதிர்ஷ்டம் அதிகரிக்கக்கூடும். மற்றவர்களால் உங்களுக்கு பொது இடங்களில் மரியாதை கிடைக்கும். கடனாக கொடுக்கப்பட்ட பணம் உங்களை தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
சிம்ம ராசி
புதன் சுக்கிரன் உதயம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை பிரகாசமாக கொடுக்கப் போகின்றது. வருமானத்தில் உங்களுக்கு ஏற்பட்டு கொண்ட சிக்கல்கள் அனைத்தும் குறைந்து இரட்டிப்பாக கிடைக்கும். இரண்டு கிரகங்களும் உங்கள் ராசியில் வருமான வீட்டில் அமர்ந்திருப்பதால் பணவரவில் இருந்த குறையும் இருக்காது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். தொழில் ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் உங்களுக்கு எடுத்துக்கொண்ட காரியம் அனைத்தும் வெற்றி அடையும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். பங்குச்சந்தை முதலீடுகள் உங்களுக்கு இரட்டிப்பான லாபத்தை பெற்று தரும். குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9