தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Sani: சனிக்கு மிகவும் பிடித்த ராசிகள்.. உங்கள தொட ஒருத்தவங்க பொறந்து வரணும்.. சனி பக்கபலம் உண்டு

Lord Sani: சனிக்கு மிகவும் பிடித்த ராசிகள்.. உங்கள தொட ஒருத்தவங்க பொறந்து வரணும்.. சனி பக்கபலம் உண்டு

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 11, 2024 05:14 PM IST

Lord Sani: சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். சனிபகவானின் அனுகிரகம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் கிரகங்களுக்கென சில ராசிகள் மீது அதிக அனுக்கிரகம் இருக்கும். அப்படி சனி பகவானுக்கு பிடித்த ஒரு சில ராசிகள் உள்ளன

சனிக்கு மிகவும் பிடித்த ராசிகள்.. உங்கள தொட ஒருத்தவங்க பொறந்து வரணும்.. சனி பக்கபலம் உண்டு
சனிக்கு மிகவும் பிடித்த ராசிகள்.. உங்கள தொட ஒருத்தவங்க பொறந்து வரணும்.. சனி பக்கபலம் உண்டு

சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கக் கூடியவர். அதன் காரணமாக இவர் கர்ம நாயகன் என அழைக்கப்படுகிறார். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். அதன் காரணமாக சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.

நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகிறார். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். சனிபகவானின் அனுகிரகம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் கிரகங்களுக்கென சில ராசிகள் மீது அதிக அனுக்கிரகம் இருக்கும். அப்படி சனி பகவானுக்கு பிடித்த ஒரு சில ராசிகள் உள்ளன அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

கும்ப ராசி

சனி பகவானுக்கு பிடித்த ராசிகளில் நீங்களும் ஒருவர். ஏனென்றால் உங்கள் ராசியின் அதிபதியாக அவர் திகழ்ந்தவர் என்றார். பெரும்பாலும் அனைத்து விதமான செயல்பாடுகளையும் உங்களுக்கு சாதகமாக செய்து கொடுப்பார். 

குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்பட்டாலும் அனைத்து விஷயங்களிலும் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட்டாலும் பெரிய தாக்கம் இருக்காது. ஏனென்றால் சனி பகவானின் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் இருக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு எந்த குறையும் இருக்காது. கண்ணீர் வரும் சூழ்நிலை வந்தாலும் உடனே மாற்றம் அடைந்துவிடும்.

மகர ராசி

சனி பகவானின் பிடித்த ராசிகளின் நீங்களும் ஒருவர். ஏனென்றால் உங்கள் ராசியின் அதிபதி அவர்தான் பல்வேறு விதமான தீங்குகள் உங்களை நோக்கி வந்தாலும் சனி பகவானால் அது விலகிவிடும். உங்களுக்கு சாதகமான பலன்களை சனி பகவான் எப்போதும் கொடுப்பார். சிறந்த உச்ச நிலையில் சனி பகவான் உங்களை வைத்திருப்பார். 

எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடைவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அமைவதற்கு காரணம் சனி பகவான் தான். சிக்கல்களில் இருந்து நீங்கள் தப்பித்து மகிழ்ச்சியான வாழ்க்கையில் பெறுவதற்கு காரணமும் சனி பகவான் தான் எனவே சனி பகவானின் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் இருக்கும்.

துலாம் ராசி

விருப்பமான ராசிக்காரர்களின் நீங்களும் ஒருவர். இவர் உங்கள் ராசியின் உச்சத்தின் அடையாளமாக திகழ்ந்து வருகின்றார். சனி பகவானின் ஆதிக்கம் உங்களுக்கு எப்போதும் இருக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடைவதற்கு மிக முக்கிய காரணம் சனி பகவான் தான். 

மன உளைச்சல் ஏற்பட்டு சிக்கல்களை நீங்கள் சந்தித்தாலும் விரைவில் உங்களை விட்டு விலகும். ஏனென்றால் சனி பகவானின் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் இருக்கின்றது. நீண்ட காலமாக எந்த சிக்கல்களும் உங்களை நீடித்து வராது. அதற்கு காரணம் சனி பகவானின் ஆசிர்வாதம் எப்போதும் உங்கள் பின் நின்று சனி பகவான் உங்களை காத்து வருவார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel