Tamil News  /  Astrology  /  Here We Will See About The Zodiac Signs That Get The Yoga From Lord Mars

Transit of Mars: செவ்வாய் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் ஆரம்பம்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 13, 2024 11:50 AM IST

Transit of Mars: செவ்வாய் பகவானால் யோகத்தை பெறுகின்ற ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

செவ்வாய் பெயர்ச்சி
செவ்வாய் பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

செவ்வாய் பகவான் தனுசு ராசியில் பயணம் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி அன்று சனி பகவானின் சொந்த ராசியான மகர ராசியில் நுழைந்தார். செவ்வாய் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த இடமாற்றத்தால் சில ராசிக்காரர்களின் ஆசையை செவ்வாய் பகவான் நிறைவேற்றி வைக்கப் போகின்றார். நிதி நிலைமை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை கொடுப்பார். மகர ராசியில் செவ்வாய் பகவான் நுழைகின்ற காரணத்தினால் உயர்வை பெறப்போகும் ராசிகளை இங்கே காண்போம்.

விருச்சிக ராசி

 

செவ்வாய் பகவான் மூன்றாவது வீட்டில் நுழைகின்றார்.0ll உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கப் போகின்றது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் மிக விரைவில் உங்களுடைய ஆசைகள் நிறைவேறும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும்.

துலாம் ராசி

 

உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். உங்களுக்கு பல்வேறு விதமான முன்னேற்றங்கள் கிடைக்கும் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவில் இருந்த குறையும் இருக்காது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய பணி சிறப்பாக இருக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.

மேஷ ராசி

 

உங்கள் ராசியில் செவ்வாய் பகவான் பத்தாவது வீட்டில் சஞ்சாரம் செய்து வருகின்றார். பல்வேறு விதமான துறைகளிலிருந்து உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயம் இருக்கும். மனிதர்கள் புதிய ஒப்பந்தங்களால் நல்ல லாபத்தை பெறுவார்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத நேரத்தில் உங்களுக்கு பணம் வரவு இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.